நல்ல வேளை ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை! ஆரம்பித்திருந்தால் காணாமல் போயிருப்பார் -ராதாரவி அட்டாக்!?

 

நல்ல வேளை  ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை! ஆரம்பித்திருந்தால் காணாமல் போயிருப்பார் -ராதாரவி அட்டாக்!?

கமலுடன் பாமக கூட்டணி வைத்திருக்கலாம். 10 தொகுதிகளுக்கு மேல் கிடைத்திருக்கும் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

சென்னை: கமலுடன் பாமக கூட்டணி வைத்திருக்கலாம். 10 தொகுதிகளுக்கு மேல் கிடைத்திருக்கும் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்காகத் தமிழக தேர்தல் களம்  பரபரப்பாக இயங்கி வருகிறது. அதில் அ.தி.மு.க- பா.ஜ.க- பா.ம.க போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கவுள்ளது. அதேசமயம் தி.மு.க.வும் காங்கிரஸும்  தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டு காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கியுள்ளது.

radharavittn

இந்நிலையில், நடிகர் ராதாரவி தனியார் இணையதள ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ‘அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்துக்கொள்வார்கள் என்பது முன்னதாகவே தெரியும். அதனால் அந்த அறிவிப்பு வெளியான போது, அதிர்ச்சி ஏதும்  ஏற்படவில்லை.  மிச்சசொச்ச அதிமுக ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள, மோடியின் தயவு அதிமுகவுக்கு வேண்டும். அதனால் கூட்டணி வைத்துள்ளார்கள். ஆனால், அதிமுகவுடனும் பாஜகவுடனும் பாமக கூட்டவைத்ததைத்தான் யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. பா.ஜ.க.வை கிழித்துத் தொங்கவிட்டுவிட்டு, அதிமுகவின் ஊழல்களையெல்லாம் பட்டியலிட்டு, புத்தகமே போட்டுவிட்டு, ராமதாஸ் ஐயா இப்படி அதிமுகவுடனும் கூட்டு சேருவார் என்பதை யாரும் எண்ணிப் பார்த்து இருக்க மாட்டார்கள். அதனால் தான் மக்களே ஒருமாதிரி திட்ட ஆரம்பித்துவிட்டார்கள்’ என்றார்.

rajini ttn

தொடர்ந்து பேசியுள்ள அவர், ‘கமல் ஹாசன் என் நண்பர். இப்போது கட்சி ஆரம்பித்திருக்கிறார். ராமதாஸ் ஐயா, கமலுடன் கூட்டணி வைத்திருந்தால் பத்து தொகுதிக்கு மேலேயே ஒதுக்கித்தந்திருப்பார் கமல். நல்லவேளை, ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை. ஆரம்பித்திருந்தால், இருக்கிற கோடிக்கணக்கான கட்சிகளுடன் அந்தக் கட்சியும் ஒன்றாகியிருக்கும்’ என்று விமர்சித்தார்.