நல்ல முடிவுகளை ஆதரிப்பதும், தவறான முடிவுகளை எதிர்ப்பதுமே அரசியலுக்கு அழகு….சசி தரூர்….!

 

நல்ல முடிவுகளை ஆதரிப்பதும், தவறான முடிவுகளை எதிர்ப்பதுமே அரசியலுக்கு அழகு….சசி தரூர்….!

மோடியின் நிலைப்பாட்டையும், அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளையும் தாம் எப்போதும் விமர்சிக்கக் கூடாது. நல்ல முடிவுகளை ஆதரிப்பதும், தவறான முடிவுகளை எதிர்ப்பது மட்டுமே நல்ல அரசியலுக்கு அழகு என்று கூறினார். 

மோடி அண்மையில் எடுத்துவரும் அனைத்து முடிவுகளையும் விமர்சிப்பது தவறான போக்கில் இருப்பதாக திருவனந்தபுரம் எம்பியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர் கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் தலைநகரம் ஜெய்பூரில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில்  திருவனந்தபுரம் எம்பியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர் கலந்துக் கொண்டார்.
அப்போது அவர் நாட்டின் தற்போதைய நிலை, பொருளாதாரம், மோடியின் அரசாங்கம், காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து உரையாற்றினர்.அதில் “காங்கிரஸ் கட்சித் தலைவர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்தால், அது தொண்டர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். சசி தரூர்

இந்தியா பொருளாதாரம் தற்போது மந்த நிலையில் உள்ளது. உள்நாட்டு உற்பத்தி 5 சதவிகிதமே உள்ளது. இதை உயர்த்த வேண்டும் என்ற முனைப்பில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தாங்கள் போட்ட முதலீடுகளை திரும்பப் பெறும் நிலை உறுவாகியுள்ளது. இதனை சரிசெய்ய தகுந்த நிலையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் மோடியின் நிலைப்பாட்டையும், அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளையும் தாம் எப்போதும் விமர்சிக்கக் கூடாது. நல்ல முடிவுகளை ஆதரிப்பதும், தவறான முடிவுகளை எதிர்ப்பது மட்டுமே நல்ல அரசியலுக்கு அழகு என்று கூறினார். 

காங்கிரஸ் கட்சியில் அண்மையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்திக்கு இடைக்கால தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதை கருத்தில் கொண்டே தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.