நல்ல தந்தை, ஆயிரம் நூலகங்களுக்கு சமம்! தந்தையரைப் போற்றுவோம்!

 

நல்ல தந்தை, ஆயிரம் நூலகங்களுக்கு சமம்! தந்தையரைப் போற்றுவோம்!

ஒவ்வொரு வருடமும், மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினத்திற்கு முன்னோடி அன்னையர் தினம் தான்.

ஒவ்வொரு வருடமும், மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினத்திற்கு முன்னோடி அன்னையர் தினம் தான். அன்னா ஜெர்வீஸ், தன்னுடைய தாயை கெளரவிக்க 1909ம் ஆண்டு முதன் முதலில் அன்னையர் தினத்தைக் கொண்டாடி, உலகுக்கு அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, தன்னுடைய வெற்றிக்குக் காரணமான தந்தையைக் கெளரவிக்க 1910ம் ஆண்டு, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஜூன் 19ம் தேதி சனேரா ஸ்மார்ட் டாட் என்பவர் தந்தையர் தினத்தைக் கொண்டாடினார்.

fathers

ஒவ்வொரு வருடமும், உலகம் முழுக்க 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர் தினமாகக்  கொண்டாடுகிறார்கள். ஓர் ஆய்வில், குடும்பத்திற்காக பொருள் ஈட்டும் தந்தையரில், 50 சதவிகிதம் பேருக்கு பணி சார்ந்த மன அழுத்தம் இருப்பதாக தெரியவந்துள்ளது. மனைவி, குழந்தைகள் என்று குடும்பத்தின் மகிழ்ச்சிக்காகத் தனது காயங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல், மனதிற்குள்ளேயே புதைத்துக் கொள்ளும் உன்னத தந்தையர்களைக் கொண்டாட வேண்டிய தினம் இது.

fathers

நகரங்களில் வசிக்கும் பெரும்பாலானோர் வீடுகளில், பள்ளிச் செல்லும் பிள்ளைகள், ‘ஹாப்பி ஃபாதர்ஸ் டே’ சொல்லி மகிழ்கிறார்கள். ஆனால், இந்த வருடத்தில் இருந்தாவது, நம் பிள்ளைகளுக்கு நாம் வளர்ந்த வாழ்க்கையை அறிமுகப்படுத்துவோம். பிள்ளைகளுக்கு, உங்கள் தந்தையைப் பற்றி சொல்லி, அவர்களிடம் பேசச் செய்து உங்கள் தந்தையை அவர்களின் மனசில் ஓர் ரியல் ஹீரோவாக்குங்கள்.
ஒரு நல்ல தந்தை, ஆயிரம் நூலகங்களுக்கு சமம்!