நல்லா சோப்பு போட்டு கை கழுவிட்டு ரூபாய் நோட்டை தொடுங்க….. பொதுமக்களுக்கு இந்திய வங்கிகள் சங்கம் அட்வைஸ்….

 

நல்லா சோப்பு போட்டு கை கழுவிட்டு ரூபாய் நோட்டை தொடுங்க….. பொதுமக்களுக்கு இந்திய வங்கிகள் சங்கம் அட்வைஸ்….

கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவிய பிறகு ரூபாய் நோட்டை தொடுங்க என பொதுமக்களுக்கு இந்திய வங்கிகள் சங்கம் அட்வைஸ் செய்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தொற்று நோயான கொரோனா வைரசிலிருந்து தற்காத்து கொள்ள அடிக்கடி கை கழுவுதல், தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பொதுமக்களுக்கு அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில் இந்திய வங்கிகள் சங்கமும் சில முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரூபாய் நோட்டுக்களை எண்ணும் நபர்

பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இந்திய வங்கிகள் சங்கம் அறிவுறுத்தியுள்ள ஆலோசனைகள்
1. ரூபாய் நோட்டை தொடுவதற்கு முன் மற்றும் ரூபாய் நோட்டை எண்ணிய பிறகும் குறைந்தபட்சம் 20 நொடிகள் கைகளை நல்லா சோப்பு போட்டு கழுவுங்க.
2. ரூபாய் நோட்டுகளுக்கு பதில் பதில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பணத்தை செலுத்துங்க.
3. அவசிய தேவை இருந்தால் மட்டுமே வங்கியின் கிளைகளுக்கு வாங்க.
4. அத்தியாவசியமில்லாத வங்கி சேவைகள், இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ். மற்றும் என்.இ.எப்.டி. போன்ற மின்னணு பேமண்ட் சேவைகளும் கிடைக்கும்.
5. எங்களது அனைத்து டிஜிட்டல் சேனல்கள் அனைத்தும் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறோம். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் உள்ளன.

இந்திய வங்கிகள் சங்கம்

நீங்க(பொதுமக்கள்) எதிர்கொள்ளும் அதே சவால்களையும் எங்கள் ஊழியர்களும் எதிர்கொள்கிறார்கள். எனவே நாங்கள் உங்கள் உதவியையும் கேட்கிறோம் என இந்திய வங்கிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் கடன் வழங்க டிஜிட்டல் வலைதளத்தை பயன்படுத்தும்படி வங்கிகளுக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளது.