நல்லா கதைவிட தெரிஞ்சவங்களுக்கு ட்விட்டர் கம்பெனியில வேலை!

 

நல்லா கதைவிட தெரிஞ்சவங்களுக்கு ட்விட்டர் கம்பெனியில வேலை!

அமெரிக்காவில் இருக்கிற தங்கள் அலுவலகத்தில் பணிபுரிய, ட்விட்டர் நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கையே கையாள திறமையான பணியாள் ஒருவரை தேடி வருவதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு செய்தியை சொல்லும்போது, எல்லாருக்கும் புரியும்படியா சொல்லணும்னா கதை சொல்றமாதிரி சொல்லணும். ட்விட்டர்னு வரும்போது இன்னும் சுருக்கமா சொல்ல தெரியணும்.

‘ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்துச்சாம்’ என ஆரம்பிக்கும் இந்த கதையையும் சுவாரஸ்யமா உங்களுக்கு சொல்ல தெரியுமா? கூடவே அதீத கற்பனை வளமும் உங்ககிட்ட இருக்கா? உங்களைத்தான் ட்விட்டர் நிறுவனம் இணையவலை வீசி தேடி வருகிறது. கதை சொல்ல தெரியுமா என்றால், ‘உங்களில் யார் அடுத்த கப்சா மன்னன்’னு ட்விட்டர் நிறுவனம் போட்டி எதுவும் நடத்தவில்லை.

twitter

ஆமாங்க, அமெரிக்காவில் இருக்கிற தங்கள் அலுவலகத்தில் பணிபுரிய, ட்விட்டர் நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கையே கையாள திறமையான பணியாள் ஒருவரை தேடி வருவதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு செய்தியை சொல்லும்போது, எல்லாருக்கும் புரியும்படியா சொல்லணும்னா கதை சொல்றமாதிரி சொல்லணும். ட்விட்டர்னு வரும்போது இன்னும் சுருக்கமா சொல்ல தெரியணும்.

 

நாங்க சின்னபுள்ளயா இருக்கும்போது, எங்க ஊர்ல சினிமாவுக்கு போய்ட்டு வந்துட்டு, “விஜயகாந்த் போலீஸ் ஜீப்லேர்ந்து அப்டியே எறங்கி மெதுவா நடந்து வருவான், இந்தப்பக்கம் வில்லனை பார்த்தா கையில அருவாளோட ஓடி வருவான், விஜயகாந்த் அப்டியெ எம்பி செவுத்துல ஒரு காலை வச்சு இன்னொரு காலால விட்ட்ட்ட்டான் பாரு ஒரு ஒத” என ரசிச்சுருசிச்சு கதை சொல்லும் மாமாவிடம் இந்த ட்விட்டர் வேலை செய்தியை சொன்னால், அவர் சீரியஸா  சொன்ன பதில் “நமக்கு இங்லீசு அவ்வளவா வராது மாப்ளே”!