நல்லாதானே இருக்காருன்னு அரசியலுக்கு இழுத்துறாதீங்க மக்கா : பாவம் சிவகார்த்திகேயன்!

 

நல்லாதானே இருக்காருன்னு அரசியலுக்கு இழுத்துறாதீங்க மக்கா : பாவம் சிவகார்த்திகேயன்!

படிச்ச பள்ளிக்கூடத்துக்கு நம்மால ஆன பங்களிப்பை செய்யணும்கிற ஆசை எல்லோருக்கும் இருக்கும்.

படிச்ச பள்ளிக்கூடத்துக்கு நம்மால ஆன பங்களிப்பை செய்யணும்கிற ஆசை எல்லோருக்கும் இருக்கும். வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவர் இயக்குனர் பொன்ராம், இயக்குனர் கோபி இருவரும் செய்த காரியத்தால் உசிலம்பட்டி முழுக்க சிவகார்த்திகேயன் பற்றிய பேச்சாக இருக்கிறது!

அப்படி என்ன செய்திட்டார் என்று கேக்குறீங்களா? பொன்ராம் படித்த அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களையும்,அடுத்த தலைமுறை இயக்குனர்களையும் வைத்து பெரிய அளவில் ஒரு கிரிக்கெட் மேட்ச் நடத்தியிருக்கிறார். இந்த ஐடியாவே சிவகார்த்திகேயன் தயாரித்த ‘கனா’ பார்த்த பிறகுதான் வந்ததாம்.

siva

16 அணிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டியின் இறுதி நாளில், சிவகார்த்திகேயன் தவிர்த்து மிஸ்டர். லோக்கல் டெக்னீசியன், ஆர்ட்டிஸ்ட் அத்தனை பேரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். சிவகார்திகேயனால் அந்தப் பள்ளிக்கு போகமுடியாத காரணத்தால் போட்டியில் வெற்றி பெற்ற டீமை சென்னைக்கு வரவழைத்து மிஸ்டர். லோக்கல் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து செம விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார்.

siva

இதை எதிர்பார்க்காத உசிலம்பட்டி மாணவர்கள் சந்தோஷத்தில் ஊர் முழுக்க சிவகார்த்திகேயன் பற்றி சிலாகித்து தள்ளுகிறார்கள். ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படப்பிடிப்பு அந்த ஊரில்தான் நடந்தது என்பதால் ஊரில் இருக்கும் முக்கால்வாசி பேருக்கு சிவகார்த்திகேயனை நன்றாக தெரியும்.

siva

“எவ்வளவு வளர்ந்தாலும் மாறாம அப்படியே இருக்காப்புலயேப்பா!” என்பதுதான் இளைஞர்கள் முதல் பெருசுகள்வரை சொல்லுகிற ஒரே டயலாக்!

எல்லாம் சரிதான்…நல்லா இருக்காப்புலன்னு சொல்லி அரசியலுக்கு வாங்கன்னு மட்டும் கோர்த்துவிட்டுராதீங்க மக்கா.

இதையும் படிங்க: உறுதியானது பிக் பாஸ் மகத்- பிராச்சி திருமணம்! புகைப்படம் உள்ளே!