நல்லாட்சி என்றால் ஏற்பீர்கள்… இடைநிற்றல் புள்ளிவிவரத்தை மட்டும் தவறு என்பீர்களா? – தங்கம் தென்னரசு கேள்வி

 

நல்லாட்சி என்றால் ஏற்பீர்கள்… இடைநிற்றல் புள்ளிவிவரத்தை மட்டும் தவறு என்பீர்களா? – தங்கம் தென்னரசு கேள்வி

தமிழக பள்ளிகளில் மாணவர்கள் இடை நிற்றல் ஒரே ஆண்டில் எட்டு சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரியவந்தது.இது குறித்து தி.மு.க எம்.எல்.ஏ-வும் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

நல்லாட்சி என்றால் ஏற்பீர்கள்… இடைநிற்றல் புள்ளிவிவரத்தை மட்டும் தவறு என்பீர்களா? 
இடை நிற்றல் ஒரே ஆண்டில் எட்டு சதவிகிதம் அதிகரிக்கக் காரணம் என்ன,நல்லாட்சி என்றால் ஏற்பீர்கள்,எதிரான புள்ளிவிவரம் என்றால் தவற என்பீர்களா என்று தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

sengottain

தமிழக பள்ளிகளில் மாணவர்கள் இடை நிற்றல் ஒரே ஆண்டில் எட்டு சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரியவந்தது.இது குறித்து தி.மு.க எம்.எல்.ஏ-வும் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், “மத்திய அரசு வெளியிட்ட தமிழக பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பான புள்ளிவிவரம் தவறானது” என்றார்.
இந்த புள்ளிவிவரம் மட்டும் எப்படி தவறாகப் போகும் என்று தி.மு.க தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய தங்கம் தென்னரசு, “தமிழக அரசுக்கு விருது வழங்கும்போது சரியாக இருந்த மத்திய அரசின் புள்ளிவிவரம், இடைநிற்றல் விவரத்தில் மட்டும் தவறாக இருக்கிறதா?” என்றார். இதற்கு செங்கோட்டையன். தமிழக அரசு புள்ளிவிவரம் சரியானது, மத்திய அரசு புள்ளிவிவரம்தான் தவறாக உள்ளது என்றார்.