நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்: நடிகர் விஜய் சேதுபதி 

 

நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்: நடிகர் விஜய் சேதுபதி 

அனைவரையும் போல நல்லது நடக்கும்னு நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை: அனைவரையும் போல நல்லது நடக்கும்னு நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து  தமிழகம்  உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு 18-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது.

சரியாக காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவில்  ஏராளமான பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினைச் செலுத்தினர். அந்த வரிசையில் மக்களோடு மக்களாய் பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதில் தமிழ் திரையுலக முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தன்னுடைய வாக்கினை கோடம்பாக்கத்தில் பதிவு செய்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது  ‘எல்லாருக்கும் வணக்கம். முதன்முறையாக ஓட்டு போடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். ஏனென்றால் அது பெருமைக்குரிய விஷயம். 18 வயதில் நம் வீட்டில் ஏதேனும் முடிவெடுக்கவே நம்பள கேட்பாங்களா என்பது தெரியாது. ஆனால், நாட்டை யார் ஆளணும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். நானும் வாக்களித்துவிட்டேன். அனைவரையும் போல நம்பிக்கையுடன் காத்துக்கொண்டு இருக்கேன். நல்லது நடக்கும்.

இந்த வருஷம் அதிகப்படியான வாக்குகள் பதிவாகும் என்று நம்புகிறேன். ஏனென்றால், மக்களிடையே அரசியல் பற்றி விழிப்புணர்வு அதிகமாகவே உள்ளது’ என்று கூறியுள்ளார். 

இதையும் படிங்க: SK 14 அப்டேட்: பைக் ரேஸராக களமிறங்கும் சிவகார்த்திகேயன்