நர்ஸ்கள் உடை மாற்றுவதை ரகசிய வீடியோ எடுத்தவரின் பகீர் வாக்குமூலம்

 

நர்ஸ்கள் உடை மாற்றுவதை ரகசிய வீடியோ எடுத்தவரின் பகீர் வாக்குமூலம்

பிரபல தனியார் மருத்துவமனையில் நர்ஸ்கள் உடை மாற்றும் ரகசிய வீடியோவை எடுத்த துப்புரவு பணியாளர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

சென்னை: பிரபல தனியார் மருத்துவமனையில் நர்ஸ்கள் உடை மாற்றும் ரகசிய வீடியோவை எடுத்த துப்புரவு பணியாளர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

சென்னை அண்ணாசாலையில் சிறுநீரக கோளாறு தொடர்பான சிகிச்சைக்கு பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு ரேவதி என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவர், மருத்துவமனைக்குள் ஒருமுறை நடந்து சென்றபோது துப்பரவுப் பணியாளர் ஒருவர், தன்னுடைய கைப்பேசியில் ஆபாசப் படங்களை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அதைக் கவனித்து அதிர்ச்சியடைந்த ரேவதி துப்பரவுப் பணியாளரிடம் விசாரித்தபோது அந்த செல்போனில் நர்ஸ்களின் வீடியோக்களும் புகைப்படங்களும் இருப்பதை கண்டு மேற்கொண்டு அதிர்ச்சியடைந்தார்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்தபோது, துப்பரவுப் பணி சூப்பர்வைஸர் சிவபிரகாஷ் என்பவரிடம் மருத்துவமனையில் நர்ஸ்கள் உடை மாற்றும் வீடியோக்கள் அதிகம் உள்ளன என்று கூறியுள்ளார். இதனையடுத்து சிவபிரகாஷின் செல்போனை ஆய்வு செய்ததில் நர்ஸ்கள் உடைமாற்றும் வீடியோக்கள் இருந்தன.

இதனால், அவர்கள் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சைதாப்பேட்டை காவல்நிலைய காவல் ஆய்வாளர் விஜயகுமார், உதவி ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் காவல்துறையினர் மருத்துவமனைக்குச் சென்று சிவபிரகாஷை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரிடம் விசாரித்தபோது, பெண்கள், நர்ஸ்கள் உடைமாற்றும் அறையில் என்னுடைய செல்போனை ஆள் இல்லாத நேரத்தில் வைப்பேன். பெரும்பாலும் எனக்கு இரவு பணி என்பதால் செல்போனை நள்ளிரவில் வைத்துவிட்டு மறுநாள் காலையில் அதை எடுத்து அதில் பதிவாகி இருக்கும்  நர்ஸ்கள், பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பகலில் பார்ப்பேன் என்று வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து சிவபிரகாஷை காவல்துறையினர் கைது செய்தனர்.  

இதேபோல் சென்னையில் இருக்கும் ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் தங்கி இருக்கும் விடுதியிலும் சமீபத்தில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியது. தற்போது மீண்டும் அதேபோன்ற சம்பவம் சென்னையில் அதுவும் ஒரு மருத்துவமனையில் அரங்கேறியிருப்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது.