நரேந்திர மோடியால் இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து.கார்டியன் வெளியிட்ட கடிதம்!

நரேந்திர மோடியால் இந்திய  ஜனநாயகத்துக்கு ஆபத்து.கார்டியன் வெளியிட்ட கடிதம்!

இந்தத் தேர்தலில் மோடியின் வெற்றியை ‘ லேண்ட் ஸ்லைட் விக்டரி’ என்று சிலாகித்து இருக்கும் பிரபல ஆங்கில நாளிதழான கார்டியன்,மோடியின் வெற்றி இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து…என்று பீதியூட்டும் ஒரு கடிதத்தையும் வெளியிட்டு இருக்கிறது.

the guardian

 இந்திய அரசியல் கட்சிகள்,ஜாதி,மத வேற்றுமைகளை தூண்டி , தேர்தல வெற்றிக்கு அதைப் பயன்படுத்திக்கொள்வது புதியதில்லை.இந்துக்களுக்கு எதிராக,இஸ்லாமியரையும் ,சீக்கியர்களிடமும் வெறுப்பை வளர்ப்பது. பிராமணர்களையும் பிராமணரல்லாதோரையும் மோத விடுவது.உயர் ஜாதியினருடன் ஒடுக்கப்பட்ட ஜாதியிரை மோதலுக்கு தூண்டுவது எதுவுமே புதியதல்ல!

modi

ஆனால்,முதன் முறையாக வகுப்புவாதமும்,மதவாதமும் பேசும் பாரதீய ஜனதா கட்சி இரண்டாவது முறையாக பதவிக்கு வந்திருக்கிறது.இது 2014 தேர்தலிலேயே வாக்காளர்களை ,குறிப்பாக சிறுபான்மை வாக்காளர்களை தனி மனிதராகப் பார்க்காமல் ஒரு மந்தையைப் போல நடத்திய கட்சி.

அப்படிப்பட்ட பாரதிய ஜனதா,இப்போது மீண்டும் பதவிக்கு வந்திருப்பதால் இந்தியாவில் பிரித்தாளுதலும்,அடக்குமுறையும் அதிகமாகலாம்,முடிவில் அது இந்தியாவின் ஜனநாயகத்துக்கே ஆபத்தாகலாம் என்கிறது அந்தக்கடிதம்.ஆனால் கார்டியன் தலையங்கமோ,இந்தியாவின் ஆன்மாவை இருள் சூழ்ந்துவிட்டது என்கிறது.