நயன்தாராவை மிக ரொமாண்டிக்காக வர்ணித்த காதலர் விக்னேஷ் சிவன்!

 

நயன்தாராவை மிக ரொமாண்டிக்காக வர்ணித்த காதலர் விக்னேஷ் சிவன்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை மிக ரொமாண்டிக்காக வர்ணித்து ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். 

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை மிக ரொமாண்டிக்காக வர்ணித்து ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். 

 நானும் ரவுடி தான் படத்தின் மூலம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருகின்றனர். 
தமிழ்-தெலுங்கு என்று கேப் விடாமல் நடித்து வரும் நயன்தாரா, நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது காதலருடன்  வெளிநாடுகளுக்குச் சென்று நாட்களைக் கழிப்பது மட்டுமின்றி, அங்கு எடுத்துக்கொள்ளும்  புகைப்படங்களையும் தவறாமல் பதிவு செய்வது என்று தன்னை எப்போதும் குஷியாக வைத்துள்ளார். 

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவின் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அது அவர்கள் இருவரும் சமீபத்தில் சென்ற சாண்டோரினி இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார். 

நயன்தாரா முகத்தை மறைத்துக் கொண்டு கைகளுக்குள் சூரியன் தெரியும்படி போஸ் கொடுத்திருக்கிறார். அதில் விக்னேஷ் சிவன் கூறியதாவது, ‘அழகிய சூரியனும் அவள் விரல் தொட்டு விளையாட ஆசைப்பட்டது’ என்று ரொமாண்டிக்காக வர்ணித்துள்ளார்.  தற்போது அந்த புகைப்படம் அவரது ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.