நம் பிள்ளைகளுக்கு நாம் நல்ல காரியங்களை சொல்லி தருகிறோமா?!

 

நம் பிள்ளைகளுக்கு நாம் நல்ல காரியங்களை சொல்லி தருகிறோமா?!

கிறிஸ்துமஸ் வந்துவிட்டது அனைத்து இடங்களிலும் வீடுகளிலும் கிறிஸ்துமஸ் குடில்களும் ஸ்டார்களும் வைத்து அலங்காரங்களும் வண்ண விளக்குகளும் ஜொலிக்கின்றன, மேலும் கிறிஸ்துமஸ் தாத்தா மீது குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம். காரணம் சாண்டா கிளாஸ் பொம்மைகளையும், பரிசுகளையும் தங்களுக்குப்பிடித்த பொருட்களை தருவார் என்று ஒரு நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது. 

கிறிஸ்துமஸ் வந்துவிட்டது அனைத்து இடங்களிலும் வீடுகளிலும் கிறிஸ்துமஸ் குடில்களும் ஸ்டார்களும் வைத்து அலங்காரங்களும் வண்ண விளக்குகளும் ஜொலிக்கின்றன, மேலும் கிறிஸ்துமஸ் தாத்தா மீது குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம். காரணம் சாண்டா கிளாஸ் பொம்மைகளையும், பரிசுகளையும் தங்களுக்குப்பிடித்த பொருட்களை தருவார் என்று ஒரு நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது. 

santa

மேலும் சிறுவர்கள் ஒருகட்டத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா உண்மையில் பரிசுகளை கொண்டு தருவது ஒரு கட்டுக்கதை என்பதை அறிந்துகொள்கிறார்கள். ஆயினும் குழந்தைகள் தங்கள் பெற்றோரை வெறுப்பதற்கும் காரணமாகிவிடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். பெற்றோருக்கு கிறிஸ்துமஸ் தாத்தா இல்லை என்று தெரிந்தும் அவர்கள் அதை ஒரு சடங்காகவே தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்து செல்கின்றனர்.குழந்தைகள் தங்கள் பெற்றோரை நம்புவதால் சாண்டா கிளாஸையும் அப்படியே நம்புகின்றனர். பெற்றோர் தங்கள் பருவதில் பெற்ற மாஜிக் அனுபவத்தை தங்கள் குழந்தைகளுக்கும் எடுத்து செல்லுகின்றனர். இப்படி குழந்தைகளிடம் அசாதாரணமான மாஜிக் நிகழ்வுகளை பகிர்வதும், ஒருவிதத்தில் நன்மைதான் ஏனென்றால் அது அவர்களின் சிந்தனை திறனை மேம்படுத்துவதுடன், அவர்களின் கேள்வி கேட்கும் திறனும் உடன் வளர்கிறது. 

family

ஆயினும் இந்த அசாதாரண செய்திகளை அவர்களிடம் கூறுவதும் பின்பற்றவைப்பதும் நல்ல சிந்தனைகளை வளர்க்கும் விதத்தில் இருக்கும் வரை நல்லது. இல்லையெனில் அவர்களை எதிபார்க்கவைத்து ஏமாற்றத்தை தருவதற்கு சமமாகிவிடும்.குழந்தைகள் எப்போதும் நடக்காத விஷயங்களை எதிர்பார்ப்பது சாதாரணம் ஆயினும் அவர்கள் ஒருகட்டத்தில் உண்மையை அறிந்துகொள்ள தொடங்குவர்.அவர்களின் மூளை வளர்ச்சி அவர்களின் சிந்திக்கும் திறனை அதிகரிக்கும், கேள்விகளும் எழும்பும் அதற்கு தீர்வுகளையும் அறிய முயற்சி செய்வர். மேலும், குழந்தைகள் தாங்களே கேள்விக்கு பதிலை கண்டுபிடித்தால் அவர்களின் சந்தோசத்திற்கு அளவே இருக்காது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

family

மேலும் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கடிதம் எழுதுவது அவர்களின் எழுத்து திறமையையும், மொழித்திறமையையும் அதிகரிக்கும் அவர்களின் கிரேட்டிவ் சிந்தனையும் இதன் மூலம் அதிகரிக்கும். மாசாச்சூசெட்ஸ் யூனிவர்சிட்டி பேராசிரியரானா ராபர்ட் பெல்ட்மன் கூறியதாவது,”நேர்மையின்மை என்பது குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோரின் நடவடிக்கை மூலமாகவே அவர்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது” 

letter

பெற்றோர் குழந்தைகளுக்கு அவர்களின் நம்பகத்தன்மையை சோதிக்க தூண்டும் செயல்களில் ஈடுபடக்கூடாது. பெற்றோர் குழந்தைகள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை குலைக்க கூடாது. பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் “‘நீ இப்படி செய்தால் நான் உனக்கு இதை வாங்கி தருகிறேன், நான் சொல்லும் பேச்சை  கேட்டால் உனக்கு நீ கேட்கும் பொருளை வாங்கித்தருவேன்” என்று கூறுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் மிகவும் சென்சிடிவ் மனதை கொண்டவர்கள். பெற்றோர் தாங்கள் கூறியதை நினைவேற்ற தவறினால் அது அவர்களின் மனத்தில் ஆழமாக பதிந்து விடும்.குழந்தைகளிடம் நாம் நம்முடைய கோரிக்கைகளை வைக்க கூடாது அவர்களிடம் எந்தவித எதிர்பார்ப்புமின்றி அன்பு செலுத்த வேண்டும். 

family

பெற்றோர் நாம் நம் குழந்தைகளுக்கு நன்மையான விஷயங்களை கற்றுக்கொடுப்பதில் முன்னோடியாக இருக்க வேண்டும்! இதுவே அவர்களின் வளர்ச்சிக்கும் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கவும் வித்திடும்.