நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது! – தேசியவாத காங்கிரஸ் சமாளிப்பு

நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது! – தேசியவாத காங்கிரஸ் சமாளிப்பு

மகாராஷ்டிர மக்களின் நலனுக்காக உடனடியாக மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான அரசு அமைந்தால் அதற்கு ஆதரவு தருவதா வேண்டாமா என்று காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் விவாதித்து வருகின்றன.

nawab malik

இந்த சூழ்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேறினால் அதற்கு ஆதரவு அளிப்பது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூறினர். அதற்கு ஏற்றாற்போல், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிவசேனா இன்று வெளியேறியது. தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே சந்தித்து பேசினார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி விவாதித்து வருகிறது.
இந்தசூழ்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “மகாராஷ்டிரா மக்களின் நன்மைக்காக மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டியது நம் அனைவரின் பொறுப்பாக உள்ளது. இருப்பினும் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சி தன்னுடைய முடிவை அறிவிக்கும் வரையில் தேசியவாத காங்கிரஸ் எந்த ஒரு முடிவையும் எடுக்காது” என்றார்.