நம்ம வண்டில போகாதீங்க….. பிளைட்ல போங்க… அதிகாரிகளுக்கு ரயில்வே அறிவுறுத்தல்

 

நம்ம வண்டில போகாதீங்க….. பிளைட்ல போங்க… அதிகாரிகளுக்கு ரயில்வே அறிவுறுத்தல்

அதிகாரிகளின் செயல் திறனை அதிகரிக்கும் நோக்கில், ஏசி1, ஏசி2 ரயில் கோச்சுகளில் பயணம் செய்வதற்கு பதிலாக விமானத்துல போங்க என அவர்களிடம் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

பொதுவாக ரயில் பயணம் நடுத்தர வர்த்தகத்தினருக்கு கிடைத்த வரப்பிரசாதம். நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு  பஸ், விமானத்தில் செல்வதை காட்டிலும் ரயிலில் குறைந்த செலவில் சென்று விடலாம். அதனால்தான் பெரும்பாலான மக்கள் ரயில்களில் செல்வதை விரும்புகின்றனர்.

ஏ.சி. ரயில் கோச்

அதேசமயம், சில நகரங்களுக்கு ரயிலில் ஏசி1, ஏசி2 கோச்சுகளில் செல்வதற்கு ஆகும் செலவைக் காட்டிலும் சில தனியார் விமானங்களில் குறைந்த செலவில் சென்று விடலாம். இதே கருத்தைதான் கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளர் தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ரயில்

இந்நிலையில், தனது அதிகாரிகளின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கிலும், ஒரு வழி பயணம் நேரம் 12 மணி நேரத்துக்கு மேல் இருந்தால் அதிகாரிகள் விமானத்தில் பயணம் செய்யுமாறு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. அண்மையில், தென் மேற்கு ரயில்வே மண்டலத்தின் கர்நாடகா தலைமை அலுவலகம், டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு விமானத்தில் செல்லுமாறு மூத்த அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளது. இந்த நகரங்களுக்கு ஏசி1, ஏசி2 ரயில் கோச்சுகளில் பயணம் செய்வதற்கான கட்டணத்தை காட்டிலும் விமான கட்டணம் குறைவாக உள்ளது.

இது தொடர்பாக தென் மேற்கு ரயில்வேயின் தலைமை மேலாளர் கூறுகையில், இந்த ரயில்வே மண்டலத்தில் இருந்து டயர் 1 நகரங்கள் செல்ல குறைந்தபட்சம் 12 மணி நேரத்துக்கு மேலாகும். இதே விமானத்தில் சென்றால் நேரம் மிச்சமாகும் பணியாளர்களின் செயல்திறனும் அதிகரிக்கும் என்று கூறினார்.