நம்ம ‘தல’ அஜித்துக்கு அவரது ராசிப்படி இந்தப் புத்தாண்டு எப்படியிருக்கும்?

 

நம்ம ‘தல’ அஜித்துக்கு அவரது ராசிப்படி இந்தப் புத்தாண்டு எப்படியிருக்கும்?

மே ஒன்றாம் தேதி பிறந்த நடிகர் அஜித் குமாருக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பாக இருக்கும்

மே ஒன்றாம் தேதி பிறந்த நடிகர் அஜித் குமாருக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பாக இருக்கும்.அஜித்தின் ராசி மேஷம்.மேஷ ராசிக்காரர்கள் எந்த விஷயத்தையும் மூடி மறைத்து வைப்பவர்கள் அல்ல. பட்டென்று போட்டு உடைத்து விட்டுப் போயிட்டே இருப்பார்கள்.

ajith

வெளிப்படையான இந்தத் தன்மையை நடிகர் அஜித்திடம் எப்போதுமே பளிச்சென்று தெரியும்.யாரையும் சந்தோஷப்படுத்துவதற்காகவோ, தாஜா செய்வதற்காகவோ போலியாக நடந்துகொள்ள மாட்டார்.

ajith
புத்தாண்டின் தொடக்கத்திலேயே ‘விஸ்வாசத்தை’ வெளியிட்டு அதிரடியாக அமர்க்கப்படுத்திவிட்டார்.தல-யின் ரசிகர்கள் அந்தப் படத்தை வெற்றிப்படமாக மாற்றி கொண்டாடி வருகின்றனர்.2019ன் ஆரம்பத்திலேயே அதகளப்படுத்திவிட்டார் அஜித்.

ajith

ரஜினியின் ‘பேட்ட’ படத்தையே தூக்கி சாப்பிட்டு விட்டது விஸ்வாசம் என அவரது ரசிகர்கள் கோலாகலமாக இருக்கின்றனர்.மனதில் பட்டதை சட்டென சொல்லி விடும் அஜித் குமார் அரசியல்வாதிகளுக்கும் அடங்கிச் செல்லாத தைரியசாலி. மேஷ ராசியில் பிறந்த நடிகர் அஜித்துக்கு ஏற்ற நிறங்கள்- மஞ்சள், ஆரஞ்சு, பொன்னிறம். ஏற்ற எண்கள்- 5, 7.