நம்ம ஊரு pizza…கறி தோசை செய்வது எப்படி?

 

நம்ம ஊரு pizza…கறி தோசை செய்வது எப்படி?

மதுரைக்காரர்கள் நல்லி ஃபிரை,நண்டு ஆம்லெட்,நாக்கு ரோஸ்ட் போன்ற பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி அசைவப் பிரியர்களை அசரவைத்துக்கொண்டே இருப்பார்கள்!அவர்களின் இன்னொரு மகத்தான கண்டுபிடிப்புதான் மட்டன் கறிதோசை,அதை செய்வது எப்படித் தெரியுமா? 

மதுரைக்காரர்கள் நல்லி ஃபிரை,நண்டு ஆம்லெட்,நாக்கு ரோஸ்ட் போன்ற பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி அசைவப் பிரியர்களை அசரவைத்துக்கொண்டே இருப்பார்கள்!அவர்களின் இன்னொரு மகத்தான கண்டுபிடிப்புதான் மட்டன் கறிதோசை,அதை செய்வது எப்படித் தெரியுமா? 

kari dhosai

தேவையான பொருட்கள்

தோசை மாவு
மட்டன் கொத்துக்கறி ¼ கிலோ
( 3 தோசைகள் செய்யலாம்)
பொடியாக வெட்டிய,வெங்காயம் 1
தக்காளி 1
பச்சை மிளகாய் 1
சோம்பு ½ ஸ்பூன்
இஞ்சிப்பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் ½ ஸ்பூன்
மல்லித்தூள் 2 ஸ்பூன்
சீரகத்தூள் ½ ஸ்பூன்
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
முட்டை 3
கறிவேப்பிலை
உப்பு 
கடலை எண்ணெய் 

இப்போது அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி,அது சூடானதும் சோம்பு கறிவேப்பிலை போட்டுத்தாளியுங்கள்.இப்போது வெட்டி வைத்த வெங்காயம்,பச்சை மில்காய் சேர்த்து வதக்குங்கள்.வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சைவாசனை போகுவரை கிளறிவிட்டு தக்காளி சேருங்கள்.சிறிது உப்பு போடுங்கள்.தக்காளி  குழைய வெந்ததுத்தவுடன் பொடிகளை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்குங்கள். 

kari dhosai

அனைத்தும் கலந்து எண்ணை பிரிந்து வரும்போது கொத்துக்கறியை சேர்த்து கிளறி விடுங்கள்.கொத்துக்கறிக்குத் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறுங்கள்.அதில் இருக்கும் தண்ணீரிலேயே முக்கால் பதம் வெந்துவிடும், கடைசியில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு,அடுப்பை சிம்மில் வையுங்கள்.

பத்து நிமிடத்தில் இது தயாராகிவிடும்.இப்போது,கறி இருக்கும் கடாயை இறக்கி வைத்து விட்டு,அடுப்பில் ஒரு தோசைகல்லை வைத்து அதில் ஒன்றரை கரண்டி மாவு விட்டு தோசை போடுங்கள்.
அரைஸ்பூன் எண்ணை விடுங்கள்.ஒரு முட்டையை உடைத்து தோசை மீது ஊற்றி பரப்பி விடுங்கள்,திருப்பிப் போடலாம் என்கிற நிலைக்கு தோசை வெந்ததும்,கடாயில் இருக்கும் கொத்துக்கறியை ஒரு கரண்டியில் அள்ளி தோசை மீது வைத்து,அதையும் நன்றாக தோசைமீது பரப்புங்கள். 

kari dhosai

இப்பொழுது,கொஞ்சம் கறிவேப்பிலை இலைகளைக் கிள்ளி தோசைமேல் தூவி திருப்பிப் போடுங்கள்.இப்போது,நம்ம ஊர் ‘ பீட்சா’ மதுரை கறிதோசை ரெடி!