நம்ம ஊருல வராத மழைக்கு ரெட் அலர்ட், வராத மழைக்கு தேர்தல் ஒத்தி வைப்பு: அதிமுகவை கலாய்த்த துரைமுருகன்

 

நம்ம ஊருல  வராத மழைக்கு ரெட் அலர்ட், வராத மழைக்கு தேர்தல் ஒத்தி வைப்பு: அதிமுகவை கலாய்த்த துரைமுருகன்

பருவமழை காரணமாக   திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் தற்போது இடைத்தேர்தல் இல்லை என்ற அறிவிப்புக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை: பருவமழை காரணமாக   திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் தற்போது இடைத்தேர்தல் இல்லை என்ற அறிவிப்புக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகன்,
ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், தோழமை கட்சிகளும் வருடா வருடம் ஒரு வார்டில் இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள் பட்டியலை சேகரித்து அதிகாரிகளுக்கு அனுப்புகிறார்கள். இறந்தவர்கள் மற்றும் குடிபெயர்ந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து அதிகாரிகள் நீக்கியிருக்க வேண்டும். ஆனால் திரும்ப திரும்ப எழுதிக்கொடுத்தும் இதுவரையில் நீக்காமல் இருப்பது எனக்கு இரண்டு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று அதிகாரிகள் சோம்பேறியாக இருப்பார்கள் அல்லது இறந்தவர்களின் பெயர்களை வைத்து வாக்குபெற பின்புலத்தில் இருந்து யாரோ செயல்பட்டு கொண்டிருக்கலாம்’ என்று கூறினார்.

 
இதையடுத்து இடைத்தேர்தல் தள்ளிவைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், ‘நம்ம ஊரில்தான் வராத மழைக்கு ரெட் அலர்ட் கொடுப்பார்கள். வராத மழைக்குத் தேர்தலை தள்ளிவைப்பார்கள்’ என்று கிண்டல் செய்துள்ளார்.