நம்மால் கொரோனா வைரசுக்கு வெற்றிகரமான தடுப்பூசியை ஒரு போதும் கண்டுபிடிக்க முடியாது…. இங்கிலாந்து அதிகாரி தகவல்…

 

நம்மால் கொரோனா வைரசுக்கு வெற்றிகரமான தடுப்பூசியை ஒரு போதும் கண்டுபிடிக்க முடியாது…. இங்கிலாந்து அதிகாரி தகவல்…

இங்கிலாந்தால் கொரோனா வைரசுக்கு வெற்றிகரமான தடுப்பூசியை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது என அந்நாட்டு வர்த்தக துறை செயலாளர் தெரிவித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தொற்று நோயான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸால் பல லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததே  இதற்கு முக்கிய காரணம்.

அலோக் சர்மா

அதேசமயம், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட முன்னணி நாடுகளின் விஞ்ஞானிகள்  கொரோனா வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளன. இந்நிலையில் இங்கிலாந்தால் கொரோனா வைரசுக்கு வெற்றிகரமான தடுப்பூசியை கண்டுபிடிக்க முடியாது என அந்நாட்டு அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசி

இங்கிலாந்தின் வர்த்தக துறை செயலாளர் அலோக் சர்மா தனது தினசரி செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: யுனைடெட் கிங்டம் (இங்கிலாந்து) கொரோனா வைரசுக்கு வெற்றிகரமான தடுப்பூசியை ஒரு போதும் கண்டுபிடிக்க முடியாது. நமது விஞ்ஞானிகள் இடைவிடாது முயற்சிகள் மேற்கொண்டு இருந்தாலும், கொரோனா வைரசுக்கு வெற்றிகரமான தடுப்பூசியை ஒரு போதும் கண்டுபிடிக்க முடியாது என்பது சாத்தியம். இங்கிலாந்தில் உலகின் பெரிய அமைப்புகளான ஆக்ஸபோர்டு யூனிவர்சிட்டி மற்றும் இம்பிரீயல் காலேஜ் லண்டன் ஆகியவை தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இங்கிலாந்து அரசு இதுவரை இந்த இரண்டு அமைப்புகளின் தடுப்பூசி திட்டங்களில் 4.70 கோடி பவுண்ட் (சுமார் ரூ.432 கோடி) முதலீடு செய்துள்ளது. புதிய அரசும் இந்த அமைப்புகளின் தடுப்பூசி திட்டங்களில் முதலீடு செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.