நமது யுத்தம் நோய்க்கு எதிரானது.. நோயாளிகளுக்கு எதிரானது அல்ல…. மத்திய அமைச்சகம் வலியுறுத்தல்…

 

நமது யுத்தம் நோய்க்கு எதிரானது.. நோயாளிகளுக்கு எதிரானது அல்ல…. மத்திய அமைச்சகம் வலியுறுத்தல்…

நமது யுத்தம் நோய்க்கு எதிரானது, நோயாளிகளுக்கு எதிரானது அல்ல என்பதை புரிந்து கொள்வது முக்கியம் என மக்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் நம் நாட்டில் நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது. இருப்பினும் அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதேசமயம் சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு குறிப்பிட்ட சமுதாயம் மற்றும் பகுதிதான் காரணம் எனக்கூறி அவற்றை களங்கப்படுத்துவதாக தெரிகிறது. இதனையடுத்து  இது போன்ற யாரையும் களங்கப்படுத்தக்கூடாது என பொதுமக்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ்

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சத்தின் இணை செயலளர் லாவ் அகர்வால் இது குறித்து கூறுகையில், உலகமே தொற்று நோயான கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வருகிறது. சமூகத்தின் யுத்தம் நோய்க்கு எதிரானது நோயுற்றவர்களுக்கு எதிரானது அல்ல என்பதை புரிந்து கொள்வது அவசியம். தீவிர பிரச்சாரத்தின் மூலம் களங்கம் தீர்க்க்பபட வேண்டும். நோயிலிருந்து குணமடைந்தவர்களிடமிருந்து வைரஸ் பரவவுதற்கான ஆபத்து இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சுகாதார பணியாளர்கள்

உண்மையில் அவர்கள் பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்தி ஆன்டிபாடிகளை குணப்படுத்தும் சாத்தியமான ஆதாரமாக இருக்கலாம். தவறான தகவல் மற்றும் பயத்தை பரப்புவதை நாம் தவிர்க்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவலுக்கு எநத சமூகமும் அல்லது எந்தவொரு பகுதியையும் பெயரிடக்கூடாது. குறிப்பாக மருத்துவ, சுகாதார பணியாளர்கள் அல்லது காவல்துறையினரை குறிவைக்கக்கூடாது அவர்கள் உங்களுக்கு உதவ இருக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.