நமக்கு வாலிப வயசு அதனால கொரோனா ரிஸ்க் கம்மின்னு நினைக்கிறேங்களா? அப்பம் முதல்ல இத படியுங்க….

 

நமக்கு வாலிப வயசு அதனால கொரோனா ரிஸ்க் கம்மின்னு நினைக்கிறேங்களா? அப்பம் முதல்ல இத படியுங்க….

இளைஞர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட அதிகவாய்ப்புள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19லால் உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்களை தற்காத்து கொள்ள படாதபாடு பட்டு வருகின்றன. இதுவரை கொரோனா வைரசுக்கு 8 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்பலி ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி விட்டது. மேலும் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.

சி.டி.சி.

கொரோனா வைரஸ் தொடர்பாக நாள்தோறும் புதுபுது உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கொரோனா வைரஸ் முதியவர்களை எளிதாக தாக்கும் என்றும் இளைஞர்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் உண்மை நிலவரம் என்னவோ வேறுவிதமாக இருப்பது போல் தெரிகிறது.

கொரோனா வைரஸ் பரிசோதனை

அமெரிக்க நோய் கட்டுபாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி.) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட்-19 காரணமாக இளைஞர்கள் அதிகம் உடல் நல அபாயங்களால் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவியதால் அமெரிக்க மருத்துவமனைகளில் 508 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 சதவீதம் இளைஞர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களில் 18 சதவீதம் பேர் 44 முதல் 54 வயது வரை உள்ளவர்கள். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் 55 வயதிற்குட்பட்டவர்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, இளைஞர்களை கொரோனா வைரஸ் தொடர்பாக கொஞ்சம் விழிப்புணர்வோடு இருந்தால் நமக்கும் நல்லது நம்ம சமுதாயத்துக்கும் நல்லது.