“நமக்காக இவங்க வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க” : நடிகர் சசிகுமாரின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ!

 

“நமக்காக இவங்க வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க” : நடிகர் சசிகுமாரின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ!

கொரோனா பாதிக்கபட்ட பகுதிகளை கண்காணிக்க ட்ரோன் கேமிராக்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க  மத்திய, மாநில அரசுகள்  தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதேசமயம்  கொரோனா தொற்றால் சினிமா, வணிகம், வியாபாரம், கல்வி என்று அனைத்து துறைகளும் முடங்கி கிடக்கிறது. 

tt

இதனால் போலீசார் இரவு பகல் பாராமல் தொடர்ந்து மக்களுக்காக உழைத்து  பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறி வருகிறார்கள்.  இருப்பினும் பொதுமக்கள் அலட்சியமாக எப்போதும் போலவே வெளியில் தேவையில்லாமல் நடமாடுவது வேதனை தரக்கூடியதாக உள்ளது. கொரோனா பாதிக்கபட்ட பகுதிகளை கண்காணிக்க ட்ரோன் கேமிராக்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  

tt

இந்நிலையில்  மதுரையில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் நடிகர் சசிகுமாருடன் இணைந்து  மதுரை மாநகராட்சி போலீசார் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியீட்டுள்ளனர்.  அதில் சசிகுமார் வாகன ஓட்டிகளிடம் “நமக்கு வீட்ல இருக்க கஷ்டமா இருக்கு. ஆனா, நமக்காக இவங்க வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க. நாமதான் ஒத்துழைக்கணும்” என்று கூறுவது போலவும், அதே சமயம் தங்கள் குடும்பத்தையும், குழந்தைகளையும் வீட்டில் விட்டு விட்டு நமக்காக போலீசார் உழைக்கிறார்கள். அதனால் வீடுகளை வெளியே வராமல் கொரோனாவை ஒழிப்போம் என்று கூறி உள்ளார். 

இந்த வீடியோ தற்போது யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது. திரை துறை நடிகர் நடிகைகள் பலர் விழிப்புணர்வு தரும் வீடியோக்களை வெளியிட்டு வந்தாலும் சசிகுமாரின் இந்த முயற்சி பலரையும் கவர்ந்துள்ளது.