நதிகளை இணைத்துவிட்டால் நிம்மதியா கண்ண மூடிடுவேன்; ரஜினியின் நீர் அரசியல்?!..

 

நதிகளை இணைத்துவிட்டால் நிம்மதியா கண்ண மூடிடுவேன்; ரஜினியின் நீர் அரசியல்?!..

அரசியல் கட்சிகள் எல்லாம் நதி நீர் இணைப்பை தங்கள் அறிக்கையில் சேர்த்தால், அனைவருக்கும் ஆதரவு தெரிவித்துவிட்டு ரஜினி அரசியலை விட்டு விலகிவிடுவார் போல் தெரிகிறது.

ரஜினிகாந்த் உலக அளவில் பெரிதும் கொண்டாடப்படுவதற்கு தமிழக மக்கள் முக்கியமான காரணம். ரஜினிக்காக உயிரை கொடுக்கும் அளவு தீவிர ரசிகர்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். தமிழக மக்களின் அன்பை பெற்று திரையுலகில் கொடிகட்டி பறந்த ரஜினியின் பயணத்தில் விழுந்த கருப்புப் புள்ளிதான் காவிரி பிரச்னை.

rajini

காவிரி பிரச்னையில் தமிழக மக்களுக்கு ஆதரவாக பேசினால் கர்நாடகாவில் ரஜினி படம் ஓடாது, அவரது உருவ பொம்மை எரிக்கப்படும். அமைதியாக இருந்தால், தமிழகத்தில் ரஜினியை பலர் கன்னடராகப் பார்க்கத் துவங்கிவிடுவார்கள். இப்படி இரு தரப்புக்கும் இடையே சிக்கிக் கொண்டு பல ஆண்டுகளாக ரஜினி படாத பாடுபட்டு வருகிறார்.

sdzfv

தமிழகத்தில் நீர் பிரச்னைதான் மக்களுக்கு தன் மீது அதிருப்தி ஏற்பட காரணம் என்ற எண்ணம் ரஜினிக்கு வந்துவிட்டது. அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்ன பிறகும் சரி, அதற்கு முன்பும் சரி, ரஜினி நதி நீர் இணைப்பு பற்றி தொடர்ந்து பேசி வருகிறார்.

raji

நதி நீர் இணைப்புக்காக ரூ. 1 கோடி அளித்ததும் அதனால்தான் என்று சொல்லலாம். காவிரி பிரச்னை ஆரம்பமானால் முதலில் பீதியாவது ரஜினிக்குதான், நாட்டில் எந்த பிரச்னை நடந்தாலும் வாய்திறக்காத அவர், நதி நீர் இணைப்பு என்றால் உடனே வாய் திறப்பார்.

காலா

‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, தென்னிந்திய நதிகளை இணைத்துவிட்டால் நிம்மதியா கண்ண மூடிடுவேன் என்றார். மேலும், லிங்கா படத்தை ஒப்புக்கொள்ள காரணமும் அதில் பேசப்படும் நீர் அரசியல்தான் என ஓப்பனாகவே கூறினார். காலா படமும் நிலம், நீர் எங்கள் உரிமை என்ற கருத்தை முன்வைக்கிறது, அதனால்தான் அதையும் ஒப்புக்கொண்டிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

ரஜினி

இப்படி தொடர்ந்து நதி நீர் இணைப்பு பற்றி பேசி வரும் ரஜினி, பாஜக அறிக்கையில் நதி நீர் இணைப்பு திட்டம் இருப்பதால், அக்கட்சி ஆட்சிக்கு வந்து அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பேட்டியளித்தார். பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என ரஜினி மீது விமர்சனம் வைக்கப்படுகிறது.

மோடி

அரசியல் கட்சிகள் எல்லாம் நதி நீர் இணைப்பை தங்கள் அறிக்கையில் சேர்த்தால், அனைவருக்கும் ஆதரவு தெரிவித்துவிட்டு அரசியலை விட்டு விலகிவிடுவார் போல் தெரிகிறது. சரியில்லாத சிஸ்டம், ரஜினி தீவிர அரசியலில் இறங்கும் முன்பே சரியாகிவிட வேண்டும் என ரஜினி நடிப்பை கொண்டாடும் ரசிகர்கள் விரும்புகின்றனர்.

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் ஆரம்பம்…அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்