நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி இதோ!

 

நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி இதோ!

நடிகர் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. 

சென்னை: நடிகர் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. 

மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோ மற்றும் இயக்குநராக அறிமுகமானவர் நடிகர் ஹிப்ஹாப் ஆதி. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நட்பே துணை.

natpae thunai

ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய உருவாகியுள்ள இப்படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார். மேலும்  தமிழில் அனகா இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். மேலும் இதில் கரு பழனியப்பன், யூ-ட்யூப் மூலம் பிரபலமான விக்னேஷ்காந்த், எரும சானி விஜய் என ஏராளமானோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 4-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். ஆதியின் முந்தைய படமான மீசைய முறுக்கு படத்திற்கும் யு சான்றிதழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.