நட்பே துணை அப்டேட்: எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா ட்ரைலர்?

 

நட்பே துணை அப்டேட்: எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா ட்ரைலர்?

ஹிப்ஹாப் ஆதி நடித்துவரும் நட்பே துணை திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: ஹிப்ஹாப் ஆதி நடித்துவரும் நட்பே துணை திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தன்னுடைய ஆல்பம் மூலம் வெற்றி மேல் வெற்றி பெற்று இளைஞர்களின் அடையாளமாகத் திகழ்ந்தவர் ‘ஹிப்ஹாப்’ ஆதி. இவர் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான மீசையை முறுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றது.

natpae thunai

அதைத்தொடர்ந்து, பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில்,சுந்தர்.சி தயாரிப்பில் நட்பே துணை படத்தில் நடித்து வருகிறார். இளைஞர்களை மையமாகக் கொண்ட இதில் ஆதிக்கு ஜோடியாகஅனகா நடித்துவருகிறார்.  மேலும் இதில் கரு பழனியப்பன், யூ-ட்யூப் மூலம் பிரபலமான விக்னேஷ்காந்த், எரும சானி விஜய் என ஏராளமானோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் சிங்கிள் பசங்க பாடல் சமீபத்தில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளான, இப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகயுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.