‘நட்புன்னா என்ன தெரியுமா… சூர்யான்னா என்ன தெரியுமா..’ உங்க வாழ்க்கையை ரீவைண்ட் பண்ண ரெடியா..!?

 

‘நட்புன்னா என்ன தெரியுமா… சூர்யான்னா என்ன தெரியுமா..’ உங்க வாழ்க்கையை ரீவைண்ட் பண்ண ரெடியா..!?

வருடத்தின் இறுதி பகுதியை நெருங்கிட்டோம். பள்ளியில் படிக்கும் காலம் தொட்டு எத்தனைவிதமான நண்பர்கள், அனுபவங்கள் என கடந்து வந்த பாதையை ஒரு முறை ரீவைண்ட் பண்ணிப் பார்க்கலாமா..!? இப்போ எதுக்காக ரீவைண்ட் பண்ணிப் பார்க்கணும் என்று ‘படக்’கென்று கோவப்படாதீங்க! இந்தக் கோபம்தான் வாழ்க்கைக்கு முதல் எதிரி. வாழ்நாள் முழுக்க எவ்வளவோ துயரங்களும்,மகிழ்ச்சியும் மாறி மாறித்தான் வரும் மகிழ்ச்சியான நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கும் போது உங்கள் மனசு ‘மெல்லிய இறகு’ போல் லேசாவதை நீங்களே உணர முடியும்.

வருடத்தின் இறுதி பகுதியை நெருங்கிட்டோம். பள்ளியில் படிக்கும் காலம் தொட்டு எத்தனைவிதமான நண்பர்கள், அனுபவங்கள் என கடந்து வந்த பாதையை ஒரு முறை ரீவைண்ட் பண்ணிப் பார்க்கலாமா..!? இப்போ எதுக்காக ரீவைண்ட் பண்ணிப் பார்க்கணும் என்று ‘படக்’கென்று கோவப்படாதீங்க! இந்தக் கோபம்தான் வாழ்க்கைக்கு முதல் எதிரி. வாழ்நாள் முழுக்க எவ்வளவோ துயரங்களும்,மகிழ்ச்சியும் மாறி மாறித்தான் வரும் மகிழ்ச்சியான நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கும் போது உங்கள் மனசு ‘மெல்லிய இறகு’ போல் லேசாவதை நீங்களே உணர முடியும்.

school-children

நம் நட்பு வட்டத்தில் இருந்த… இருக்கிற நண்பர்கள் எல்லோரும் ஒரே மாதியான மனநிலையில் இருக்க முடியாது.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணநலன்கள் இருக்கும்.நட்புக்குள் மட்டும் இது எதுவுமே கணக்கில் வருவதில்லை.’நட்பு’ அவ்வளவுதான்! அந்த மாதிரி சிலரின் கேரக்டர்ஸ் எப்படி இருக்கும் என்று சில சாம்பிள்ஸ் இங்கே வரிசைப் படுத்தியிருக்கிறோம். டைம் மெஷினியில் ஏறி கொஞ்சம் பின்னோக்கிப் பயணியுங்கள்…

1.சாப்பாட்டு பிரியர்கள்:

எல்லாரோட கேங்லேயும் கண்டிப்பா ஒரு foodie இருப்பாங்க 24 மணி நேரமும் ஏதாச்சும் வாய்ல அசைபோட்டுக்கிட்டே இருப்பாங்க. இவங்களுக்கு தெரியாத ரெஸ்ட்ரெண்ட், ஹோட்டல் எதுவுமே  இருக்காது, எந்தந்த இடத்துல என்ன சாப்பாடு பேமஸ் னு எல்லாமே அத்துப்படியா வெச்சிருப்பாங்க. பண்டிகைனு வந்துட்டா இவங்கள கையில புடிக்கமுடியாது!

foodie

2.ஆர்வ கோளாறுகள்:

பண்டிகையோ விழாவோ ஏதாது ‘ஸ்பெஷல் டேய்ஸ்’ வந்தால் போதும் இவர்களை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம். எல்லாத்தையும் தடல்புடலா செலிப்ரேட் செய்றதுக்கு ஸ்டார்ட் பனிடுவாங்க! கிறிஸ்துமஸ் வற்றதுக்கு 2 மாசத்துக்கு முன்னாடியே வேலைகளை ஆரம்பிச்சுடுவாங்க! எப்போதுமே Vibrate Mode லேயே தான் இருப்பாங்க. இவங்கள சுத்தி ஒரு பாசிட்டிவ் எனர்ஜி எப்போதும் இருக்கும்!

party-celebration

3.பார்ட்டி ஸ்பாய்லர்:

உங்கள மூட் அவுட் பண்றதுக்குன்னே சிலர் காத்துட்டு இருப்பாங்க! இவங்களை பாத்தாலே இரிடேட் ஆகும். குறிப்பா நல்லா போயிக்கிட்டு இருக்கிற விழாவைக் கெடுக்குறது, இல்லேன்னா குடிச்சுட்டு மொத்த இடத்தையே நாசம் பண்றதுனு நிறைய அட்ராஸிட்டீஸ் பண்ணுவாங்க. இவங்களையும் நீங்க கண்டிப்பா கடந்து வந்திருப்பீங்க! 

4.பார்ட்டி பிரியர்கள்:

இந்த நபர்கள் பார்ட்டிகளை அதிகம் விரும்புவர்! வருடம் முழுவதும் ஏதாவது ஸ்பெஷல் நாட்களுக்காகவே காத்துக்கொண்டிருப்பார்கள்.அந்த நாட்களில் இவர்களை காட்டிலும் யாராலும் அவ்வளவு உற்சாகமடைய முடியாது! full போர்ஸ் என்ஜோய்மேன்டுடன் காண்பார்கள்!

partying

5.கிறிஸ்துமஸ் சாண்டா:

சிலர் எப்போதும் பிறரை மகிழ்ச்சியாக வைப்பதே தங்கள் வாடிக்கையாக கொண்ட நபர்களும் இருக்கிறார்கள். இவர்களும் இவர்களைச் சுற்றியும் எப்போதுமே ஒரு மகிழ்ச்சியும்,உற்சாகமும் பொங்கி வழியும்.மேலும் இவர்களைப் போல் சர்ப்ரைஸ் செய்வது கடினம், எதிர்பாராமல் கிஃட்ஸ் வழங்கி பிறருக்கு இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துவது இவர்களின் திறமை, தனித்துவம்!பிறருக்கு செலவு செய்வதை பெரிதாக கருதமாட்டார்கள். மகிழ்ச்சியை பரப்புவதுதான் இவர்களின் தாரக மந்திரம்!

santa

6.உம்மனா மூஞ்சிகள்:

ஊரே கொண்டாட்டத்தில் இருக்கும்போது சிலர் மட்டும் எனக்கு சம்பந்தமே இல்லனு ஓரமா ஒதுங்கி இருப்பாங்க! பண்டிகை பற்றியும் அதன் முக்கியத்துவத்தையும் நீங்கள் என்னதான் விளக்கினாலும் அவர்கள் சொல்வது இதுதான் “இருந்துட்டு போகட்டும்… இருந்தாலும் இவ்வளவு ஆடம்பரம் வேணாம்” இவர்களிடமிருந்து சற்று தள்ளி இருப்பதே கொண்டாட்டக்காரர்களுக்கு நல்லது!

anger-face

7.அழு மூஞ்சிகள்:

எல்லா கெட் டு கேதர்களிலும் அழுவதற்கென சில ஜீவன்கள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் நல்ல நிகழ்வை கெடுப்பதற்கென அழுவதில்லை அவர்கள் வடிப்பது ஆனந்த கண்ணீர்! இப்படிப்பட்ட உள்ளங்களை நீங்கள் சந்தித்தால் தயவுசெய்து அவர்களை இழக்கதீர்கள்! ஏனென்றால் இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் இப்போதைய காலத்தில் கிடைப்பது அபூர்வம்! 

Cry

இப்படி நம் வாழ்க்கையில் எவ்வளவோ நண்பர்களைக் கடந்து வந்திருப்போம்.
இந்தப்பயணத்தில் எவ்வளவோ மகிழ்ச்சிகளையும், துயரங்களையும் கடந்து வந்திருப்போம்.மகிழ்ச்சியான நினைவுகளை மட்டும் மறக்காமல் எப்போதும் மனதில் ஆழத்தில் பத்திரமாக வையுங்கள்.’பிரிவுகள் நிரந்தரமில்லை… நினைவுகள் மட்டுமே நிரந்தரம்..’ ஸோ,புத்தாண்டை புது உற்சாகத்தோடு கொண்டாடுவோம்.சியேர்ஸ்…