நட்புன்னா என்னானு தெரியுமா..? அதிமுக கூடாரத்தை அலற வைக்கும் செந்தில் பாலாஜி..!

 

நட்புன்னா என்னானு தெரியுமா..? அதிமுக கூடாரத்தை அலற வைக்கும் செந்தில் பாலாஜி..!

இபோது திமுக வேட்பாளராக செந்தில் பாலாஜி போட்டியிட்டாலும், அவருக்கு எதிராக தோப்பு வெங்கடாசலம் பிரசாரம் செய்ய விரும்பவில்லை.

ஈரோடு மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளை அரவக்குறிச்சி தொகுதியில் இடைத்தேர்தல் வேலை செய்ய அதிமுக தலைமை உத்தரவு போட்டது. ஈரோடு புறநகர் மாவட்டச் செயலரான, அமைச்சர் கருப்பணன், அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பொறுப்பாளராக  அறிவிக்கப்பட்டார். இவருக்கும், பெருந்துறை, எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாசலத்துக்கும் ஆரம்பம் முதலே  ஏழாம் பொருத்தம்.

தோப்பு வெங்கடாசலம்

அதுமட்டுமல்ல… அதிமுகவில்  செந்தில் பாலாஜி இருந்தபோதே அவரும், தோப்பு வெங்கடாசலமும் நகமும் சதையுமாக இருந்த நெருங்கிய நண்பர்கள். அந்த நட்பு இன்னும் துளிர்த்தே வருகிறது. இபோது திமுக வேட்பாளராக செந்தில் பாலாஜி போட்டியிட்டாலும், அவருக்கு எதிராக தோப்பு வெங்கடாசலம்  பிரசாரம் செய்ய விரும்பவில்லை.செந்தில் பாலாஜி

 ஆகையால் அரவக்குறிச்சி தொகுதிக்கு வராமல் கோவை மாவட்டம், சூலுார் தொகுதியை கேட்டு வாங்கி, அங்கே தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி விட்டார். எதிரெதிர் கட்சிகளில் இருந்தாலும் நட்புக்காக தோப்பு வெங்கடாசலம் செய்த காரியத்தால் அதிமுக தலைமை அவர் மீது ஆத்திரத்தில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சி தொடர டி.டி.வி.தினகரனை அழைத்துப்பேச வேண்டும் என முதல்வருக்கு வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்தவர்தான் இந்த தோப்பு வெங்கடாசலம். ஆகையால் பழைய விஸ்வாசம் இன்னும் அவரிடம் இருக்குமோ என அலறித்துடிக்கிறது அதிமுக தலைமை.