நட்சத்திர விடுதியில் கைதியுடன் மது விருந்து… சிறைவார்டன் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்!

 

நட்சத்திர விடுதியில் கைதியுடன் மது விருந்து… சிறைவார்டன் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்!

தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலும் அவ்வப்போது சிறைக்குள் அதிகாரிகள் சோதனையிட்டு, செல்போன்கள், சிகரெட், மது பாட்டில்கள், கஞ்சா பொட்டலங்கள் போன்றவைகளை கைப்பற்றி சில பல அதிகாரிகளை எச்சரிப்பார்கள்

தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலும் அவ்வப்போது சிறைக்குள் அதிகாரிகள் சோதனையிட்டு, செல்போன்கள், சிகரெட், மது பாட்டில்கள், கஞ்சா பொட்டலங்கள் போன்றவைகளை கைப்பற்றி சில பல அதிகாரிகளை எச்சரிப்பார்கள். 

jail

அதே போல மதுரை மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலரோடு சிறைக்காவலர்கள் மிக நெருக்கமாக இருப்பதாகவும், மதுரை மத்திய சிறைச்சாலையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை சரளமாகப்  பயன்படுத்துவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், மதுரை மத்திய சிறையின் உதவி சிறை வார்டன் முனியாண்டி, முதல்நிலை சிறை காவலர்கள் எம்.ஜி. மணி, மூர்த்தி ஆகிய மூவரும் கோச்சடை பகுதியிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பிணைக்கைதி முத்துகிருஷ்ணனுடன் ஒன்றாக மது அருந்தியதாக சில நாட்களுக்கு முன்பு புகார் எழுந்தது. 

alcohol

இது குறித்து, சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், மூவர் மீதான புகார் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, உதவி சிறை வார்டனையும், சிறைக் காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்ய ஊர்மிளா உத்தரவிட்டுள்ளார்.