நடு ராத்திரியில் மாணவிகளை ரோட்டில் தள்ளி கதவைச் சாத்திய விடுதி பொறுப்பாளர்… அதிரும் கேரளா!

நடு ராத்திரியில் மாணவிகளை ரோட்டில் தள்ளி கதவைச் சாத்திய விடுதி பொறுப்பாளர்… அதிரும் கேரளா!

கேரளாவில் பெண்கள் விவகாரம் குறித்த சர்ச்சைக்கு பஞ்சமிருக்காது என்பதற்கு லேட்டஸ்ட் சம்பவம் இன்னொரு உதாரணம்.பெண்கள் பாதுகாப்புக்கு என தொடங்கப்பட்ட அரசு திட்டமான ‘எண்டே கூடு’ விடுதியில் ஐந்து இளம் பெண்களை அனுமதிக்காமல் வெளியே தள்ளி கதவைச் சாத்திய சம்பவம் கேரளாவை அதிர வைத்திருக்கிறது!

hostel

திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே இருக்கிறது இந்த ‘எண்டே கூடு’ விடுதி.இரவு நேரத்தில் சொந்த ஊருக்கு திரும்ப முடியாத பெண்கள் இங்கே பாதுகாப்பாக தங்கிக்கொள்ளலாம் என்பதற்காக தொடங்கப்பட்ட விடுதி இது.ஐஐஎஸ்ஈஆர் கல்வி நிறுவனத்தில் படிக்கும் 5 மாணவிகள்,அந்தப் பகுதியில் உள்ள திரையரங்கு ஒன்றில் இரவுக்காட்சி பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள்.தங்களது ஹாஸ்டலுக்குச் செல்ல நேரமாகிவிடவே,காலை வரை தங்கியிருக்க சம்பந்தப்பட்ட விடுதி பொறுப்பாளரிடம் போய் கேட்டிருக்கிறார்கள்.

hostel

சினிமா பார்த்துவிட்டு வர்ற ஆளுங்களுக்கெல்லாம் இங்கே இடம் கொடுக்க முடியாது என்று கோபமாகப் பேசி,5 பெண்களையும் வெளியில் தள்ளிவிட்டு விடுதியின் கேட்டைப் பூட்டியிருக்கிறார். விடுதி பொறுப்பாளர் ஆவேசமாகப் பேசியதையும்,இவர்களை வெளியேற்றியதையும் பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.
பெண்களின் பாதுகாப்பிற்காக தொடங்கப்பட்ட ‘எண்டே கூடு’வில் இரவு நேரத்தில் பெண்கள்  தங்க அனுமதி மறுத்த செய்தி வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியதைஅடுத்து,விடுதி பொறுப்பாளருக்கு எதிராக கண்டனங்களும் அதிகரித்திருக்கிறது.இது குறித்து கல்லூரி நிர்வாகம் சொல்லும் கருத்தைப் பொறுத்து இந்த விவகாரம் முடிவுக்கு வரலாம்