நடுராத்திரியில் மொட்டை மாடியில் ஆபாச விடியோ காண்பித்து…சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்

 

நடுராத்திரியில் மொட்டை மாடியில் ஆபாச விடியோ காண்பித்து…சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்

ராத்திரிகளில் ஆபாச விடியோக்களை பார்க்கச் சொல்லி ஆதரவற்ற சிறுமிகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்து வந்த காப்பக நிர்வாகியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்

திருவண்ணாமலை: ராத்திரிகளில் ஆபாச விடியோக்களை பார்க்கச் சொல்லி ஆதரவற்ற சிறுமிகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்து வந்த காப்பக நிர்வாகியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அத்துடன் சட்டவிரோதமாக நடத்தி வந்த அந்த குழந்தைகள் காப்பகத்தையும் பூட்டி சீல் வைத்தனர்.

சமீபத்தில் திருவண்ணாமலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2 நாட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக குழந்தைகள் காப்பகங்களில் இருந்து சிறுமிகள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

ஆட்சியரிடம் சிறுமிகள் புகார்:

sex

அப்போது காப்பகத்தில் உள்ள குறை, நிறைகள் குறித்து எழுத்துபூர்வமாக கருத்து கேட்கப்பட்டது. அதில், கிரிவலப்பாதையில் செயல்பட்ட அருணை குழந்தைகள் காப்பகத்தைச் சேர்ந்த சிறுமிகள் தங்களுக்கு காப்பக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கூறினர்.

இந்த விஷயம் மாவட்ட கலெக்டர் கந்தசாமிக்கு தெரியவந்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்தார். அதனால் நேரடியாக விசாரணையில் இறங்கினார். மாவட்ட எஸ்பி உதவியுடன் இந்த விசாரணை ஆரம்பமானது.

கம்ப்யூட்டர், லேப்டாப் பறிமுதல்: 

sex

குழந்தைகள் பாதுகாப்பு நல குழும அலுவலர் கோகிலா மற்றும் போலீசார் இந்த காப்பகத்தில் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, 2 கம்ப்யூட்டர்கள், ஒரு லேப்டாப் இருந்ததை கைப்பற்றினர். அதில் ஏராளமான ஆபாச விடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பாலியல் தொல்லை:

அந்த காப்பகத்துக்கு மேலாளராக வினோத்குமார், நிர்வாகியாக நந்தகுமார் ஆகியோர் இருந்து வந்துள்ளது தெரியவந்தது. வினோத்குமாருக்கு வயது 31, நந்தகுமாருக்கு வயது 35. இவர்கள் இருவரும் நண்பர்கள். காப்பக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்திருக்கிறார்கள்.

பட்டினிக் கொடுமை: 

sex

இதுகுறித்து காப்பக சிறுமிகள் போலீசாரிடம் கூறியதாவது: “ராத்திரிகளில் கம்ப்யூட்டரில் ஆபாச படங்களை போட்டுக்காட்டி அதை பார்க்கும்படி ரெண்டு பேரும் எங்களை கட்டாயப்படுத்துவார்கள். அந்த படத்தை பார்த்ததும், அதில் உள்ளபடி எங்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்வார்கள். அப்படி நாங்கள் நடந்து கொள்ளாவிட்டால், எங்களுக்கு சாப்பாடு போடாமல் பட்டினி போட்டு கொடுமைப்படுத்துவார்கள் என்றனர்.

பீர் திருவிழா:

மேலும், காப்பகத்தில் பீர் திருவிழா என்று ஒன்று நடத்துவார்கள். இதில் எங்களை மதுகுடிக்க வைத்து ஆபாசமாக நடந்து கொள்வார்கள்” என்று கண்ணீர் மல்க கூறினர். இதையடுத்து, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, வினோத்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ததுடன், காப்பகத்தை பூட்டியும் சீல் வைத்தனர்.

காப்பகத்துக்கு சீல்: 

காப்பகத்தில் தங்கியிருந்த 19 சிறுமிகள் மீட்கப்பட்டு வேறு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இப்போது தலைமறைவாக உள்ள நந்தகுமாரை தேடி வருகிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 3 காப்பகங்களுக்கு கலெக்டர் கந்தசாமியின் நடவடிக்கையால், சீல் வைக்கப்பட்டுள்ளது.