நடுத்தெருவில் நடிகையை அசிங்கமாக திட்டி, கார் டிரைவரை தாக்கிய 3 விஷமிகள்

 

நடுத்தெருவில் நடிகையை அசிங்கமாக திட்டி, கார் டிரைவரை தாக்கிய 3 விஷமிகள்

தன்னை அசிங்கமாக திட்டியதுடன், தன் கார் டிரைவரை தாக்கிய 3 பேர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் பாலிவுட் நடிகை ஷமிதா ஷெட்டி

தாணே: தன்னை அசிங்கமாக திட்டியதுடன், தன் கார் டிரைவரை தாக்கிய 3 பேர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் பாலிவுட் நடிகை ஷமிதா ஷெட்டி.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் தங்கை நடிகை ஷமிதா ஷெட்டி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் அவர். ஷமிதா நேற்று மதியம் 1.30 மணி அளவில் காரில் தானேவில் உள்ள விவியானா மால் அருகே சென்று கொண்டிருந்திருக்கிறார்.

அப்பொழுது அந்த வழியாக வந்த பைக் ஷமிதாவின் கார் மீது மோதியுள்ளது. இதையடுத்து டிரைவர் தர்ஷன் சாவந்த் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி சேதத்தை பார்த்துள்ளார்.

மோதிய பைக்கில் வந்த 3 பேர் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை கன்னத்தில் அறைந்து அடித்து நொறுக்கியுள்ளனர். இதை தட்டிக் கேட்ட ஷமிதாவையும் கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இதையடுத்து ஷமிதா அந்த 3 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரின் டிரைவர் அந்த பைக் குறித்த விபரங்களை போலீசாரிடம் தெரிவித்தார். ஷமிதாவின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசார் பைக்கை கண்டுபிடித்துவிட்டனர் ஆனால் அந்த 3 பேரையும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.