நடிகை ரோஜாவுக்கு அல்வா… நம்ப வைத்து மோசம் செய்த ஆந்திர முதல்வரின் அதிர்ச்சி பின்னணி..!

 

நடிகை ரோஜாவுக்கு அல்வா… நம்ப வைத்து மோசம் செய்த ஆந்திர முதல்வரின் அதிர்ச்சி பின்னணி..!

தானும் சராசரி அரசியல்வாதி அல்ல என்பதை ரோஜா விவகாரத்தில் உறுதிப்படுத்தி விட்டார் ஆந்திராவின் புதிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் துணை முதல்வர், அல்லது அமைச்சர் பதவி உறுதி என எதிர்பார்த்துக் காத்திருந்த நடிகை ரோஜா ஏமாற்றத்தோடு வருந்திக் கொண்டிருகிறார். நம்ப வைத்து ஏமாற்றிய ஜெகன் மோகனின் அதிர்ச்சிப் பின்னணி வெளியாகி இருக்கிறது. roja

ஆந்திர அரசியலில் தெலுங்கு தேசம் கட்சியில் தனது பயணத்தை தொடங்கினார் ரோஜா. ஆரம்பம் தொட்டே கட்சி பணிகளில் தீவிரமாக களமாடினாலும் ரோஜாவுக்கான அங்கிகாரத்தை சந்திரபாபு நாயுடு அவ்வளவு எளிதாக வழங்கவில்லை.இன்னும் சொல்லப்போனால் ரோஜா வளர்ந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் சந்திரபாபு நாயுடு. 

அதையும் மீறி 2009 சட்டமன்ற தேர்தலில் சீட்டை பெற்றார் ரோஜா. ஆனால், அவருக்காக தெலுங்கு தேசம் கட்சிக்காரர்கள் வேலையே செய்யவில்லை. ரோஜா வெற்றி பெறக்கூடாது என்பதை மனதில் வைத்தே சந்திரபாபு நாயுடு தனது கட்சியினரை தடுத்ததாகவும் கூறப்பட்டது.  அந்தத் தோல்விக்கு பிறகு கட்சியிலிருந்தே ஓரம் கட்டப்பட்டார் ரோஜா. roja

அதன் பிறகு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ரோஜா. 2014-ல் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்து சந்திரபாபு நாயுடு .ஆட்சிக்கு எதிராக சட்டசபைக்குள் கேள்விகளால் துளைத்தெடுத்தார் ரோஜா. அடுத்து ஜெகன் மோகன் ரெட்டியின் சுற்றுப்பயண அட்டவணை தயாரிப்பது முதல் ஜெகனனின் தளபதியாகவே மாறினார்.

ரோஜா சுற்றுப்பயணம் செல்லும் இடங்களில் எல்லாம் செல்வாக்கு அதிகரித்தது. போராட்டம், ஆர்பாட்டம் என மக்கள் பிரச்னைகளை கையிலெடுத்து அனல் கிளப்பினார்.151 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று சாதனை படைக்க மூன்றே காரணங்கள் மட்டுமே. ஒன்று ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டியின் செல்வாக்கு. இரண்டாவது ஆளுங்கட்சிக்கு எதிரான மனப்பாண்மை மூன்றாவது ரோஜாவுக்கு அதிகரித்த செல்வாக்கு.

 roja

இந்த மூன்று காரணங்களால் வென்று முதலமைச்சர் பதவியை பிடித்து விட்டார் ஜெகன் மோகன் ரெட்டி. இதனால் ரோஜாவுக்கு துணை முதல்வர் பதவி, அல்லது அமைச்சர் பதவி உறுதி என கண்ணை மூடிக் கொண்டு நம்பி இருந்தனர் ரோஜாவின் ஆதரவாளர்கள். ஆனால், இதுவரை எந்தப்பதவியும் ரோஜாவுக்கு கொடுக்கவில்லை. 

கட்சியின் மகளிரணித் தலைவியாக இருக்கும் ரோஜாவுக்கு உள்துறை அல்லது மின்சார துறை வழங்கப்படலாம் எனப் பேசப்பட்டது. ஆனால் வழங்கப்படவில்லை. சாதி அடிப்படையில் பெட்டிரெட்டி, ராமச்சந்திர ரெட்டி, மேகப்பட்டு கவுதம் ரெட்டி ஆகியோருக்கு அமைச்சர் பதவிகள் தரப்பட்டு விட்டதால் அந்த இனத்தை சேர்ந்த ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.roja

இதனால் கடுப்பான ரோஜா அமைச்சர் பதவியேற்பு விழாவையே புறக்கணித்து விட்டார். அவரது செல்போனையும் சுவிட் ஆப் செய்து விட்டு வீட்டிற்குள் முடங்கி விட்டார். இதனை அறிந்த ஜெகன் மோகன் ரெட்டி ரோஜாவை சமாதானப்படுத்தும் நோக்கில்  அமைச்சர்களுக்கு இணையான பதவி வழங்குவதாக கூறி சமாதானப்படுத்தினார். அதனால் ரோஜாவுக்கு சபாநாயகர் பதவி கொடுக்கப்படலாம் என எதிர்பார்த்தார்கள் ரோஜாவின் ஆதரவாளர்கள்.ஆனால் அதிலும் ஏமாற்றம். 

தற்காலில சபாநயகராக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சீனியரான சம்பங்கி சின்ன வெங்கட அப்பாலா நாயுடு நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் புதிய சபாநாயகர் பதவிக்கு தம்மிநேனி சீதாராம், துணை சபாநாயகர் பதவிக்கு ரகுபதி ஆகியோர் அறிவிகப்பட்டுள்ளனர். ஆக சபாநாயகர் பதவியும் தரப்படாததால் அரசு தலைமை கொறடா பதவி , அல்லது வாரியத் தலைவர் பதவி கொடுக்க ஜெகன் மோகன் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. roja

ரோஜாவுக்கு அமைச்சர் பதவியோ, அல்லது துணை முதலமைச்சர் பதவியோ கொடுத்தால் ஏன் கொடுத்தீர்கள் என கட்சிக்குள் யாரும் கேட்டு விட முடியாது. ரோஜாவின் உழைப்பும், செல்வாக்கும்  அவர்களுக்கு தெரியும். அமைச்சரவையில் இடம்பெற்றவர்களும், துணை முதலமைச்சர்களும்  ரோஜாவின் அளவுக்கு செல்வாக்கு இல்லாதவர்களே… 

பிறகு ஏன் ரோஜாவை நிராகரித்தார் ஜெகன். காரணம் ரோஜாவுக்கு கூடும் செல்வாக்கு. எதிர்கட்சி எம்.எல்.ஏவாக இருக்கும்போதே பல திட்டங்களை தனது தொகுதியில் அரங்கேற்றியவர்.ரோஜாவின் பிரச்சராத்தில் கூடிய கூட்டம் ஜெகனையே நடுங்க வைத்து விட்டது. ஆகையால் இப்போது துணை முதல்வர் பதவி, அல்லது அமைச்சர் பதவி கொடுத்தால் இன்னும் ரோஜா பலமான செல்வாக்கை பெற்று விடுவார். அது எதிர்காலத்தில் தனக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால், டம்மியான வாரியத்தலைவர் பதவி, கொறடா பதவியை வழங்க முடிவெடுத்து இருக்கிறாராம் ஜெகன். இந்த பதவிகளை வைத்து கொண்டு மக்களுக்கு என்ன செய்ய முடியும் ரோஜா? 

தானும் சராசரி அரசியல்வாதி அல்ல என்பதை ரோஜா விவகாரத்தில் உறுதிப்படுத்தி விட்டார் ஆந்திராவின் புதிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி..!