நடிகை மஞ்சு வாரியரை அசத்திய குட்டி ரசிகை! வைரலாகும் புகைப்படம்..

 

நடிகை மஞ்சு வாரியரை அசத்திய குட்டி ரசிகை! வைரலாகும் புகைப்படம்..

சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்கள் அவர்களுக்கு கிடைத்த பெரும் கொடை. ஒரே ஒரு புகைப்படத்துக்காகவோ, ஒரு புன்னகைக்காகவோ அவர்கள் மணிக் கணக்கில் தங்களது மனங்கவர்ந்த நட்சத்திரத்திற்காக காத்திருப்பார்கள். அவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்களை நட்சத்திரங்கள் நினைவு வைத்திருப்பதில்லை.

சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்கள் அவர்களுக்கு கிடைத்த பெரும் கொடை. ஒரே ஒரு புகைப்படத்துக்காகவோ, ஒரு புன்னகைக்காகவோ அவர்கள் மணிக் கணக்கில் தங்களது மனங்கவர்ந்த நட்சத்திரத்திற்காக காத்திருப்பார்கள். அவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்களை நட்சத்திரங்கள் நினைவு வைத்திருப்பதில்லை. அப்படி ஒரு மறக்கமுடியாத ரசிகையை சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் பார்த்து வியந்து தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதி இருக்கிறார் அசுரன் புகழ் மஞ்சு வாரியர்.

MANJU-WARRIER-867

பிரதி பூவாலன் படத்தை முடித்துவிட்ட மஞ்சு இப்போது பிஜு மேனனுடன் லலிதம் சுந்தரம் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த மாத இறுதியில், பிரியதர்சன் இயக்கத்தில் மோகன்லாலுடன் நடித்திருக்கும், மரக்கார் அரபிக்கடலுடே சிம்ஹம் பட ரிலீசுக்காக காத்திருக்கிறார். 
இத்தனை பரபரப்புக்கு இடையில், படபிடிப்பு முடிந்து கார் ஏறப் போகும்போது கையில் ஒரு பூவுடன் வந்த அந்த சின்னஞ்சிறு ரசிகை மஞ்சுவின் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டாள். அவள் கொடுத்த பூவைப் பெற்றுக்கொண்டு அந்த அழகான வினாடியில் எடுத்த படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ‘ சின்னக் குழந்தைகள் ஒரு கல்லை எடுத்து வந்து கொடுத்தாலும் அது பரிசுதான், அதன் பின்னால் இருக்கும் அன்புக்கு நன்றி காட்ட வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதை மஞ்சு வாரியரின் ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.