நடிகை சன்னி லியோனுக்கு மெழுகு சிலை: ரசிகர்கள் உற்சாகம்!

 

நடிகை சன்னி லியோனுக்கு மெழுகு சிலை: ரசிகர்கள் உற்சாகம்!

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், ஷா ருக் கான், கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளிட்ட பலருக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ள நிலையில்  தற்போது சன்னி லியோனுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

டெல்லி: பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், ஷாருக்கான், கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளிட்ட பலருக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சன்னி லியோனுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. 

2017ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியோன். தற்போது இந்திய மொழிகளில் பல படங்களில் ஒப்பந்தமாகிவரும் நிலையில், தமிழில் வீரமாதேவி படத்தில் நடித்து வருகிறார். அது தவிர கரன்ஜித் கவுர்: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் அவரது வாழ்க்கை வரலாற்று வெப் சீரீஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

 

இந்நிலையில் டெல்லியில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் சன்னி லியோனுக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை செய்ய லண்டனில் இருந்து துஸாட்ஸ் குழுவினர் மும்பைக்கு வந்து சன்னியை சந்தித்து அளவு எடுத்துச் சென்றனர். மேலும் இந்த சிலை உருவான விதம் குறித்த வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சன்னி லியோன்.