நடிகை அமலாபாலின் தந்தை மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர் !

 

நடிகை அமலாபாலின் தந்தை மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர் !

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவின் காரணமாக கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று திடீரென உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் அமலாபால். விஜய், சூர்யா, தனுஷ் என அனைத்து நடிகர்களுடன் இணைந்து நடித்த அமலாபால் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ttn

இருப்பினும், அவரது துணிச்சலான நடிப்பிற்காகப் பலரும் அவருக்குப் பாராட்டு தெரிவித்தனர். இதனையடுத்து, அமலாபால் நடிப்பில் வெளியாகி உள்ள ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படம் வெளியாக உள்ளது. 

ttn

நடிகை அமலாபாலின் தந்தை பால் வர்கீஸ். இவருக்கு வயது 61. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவின் காரணமாக கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று திடீரென உயிரிழந்தார். இது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது உடல்  இறுதி அஞ்சலிக்காக அவர்களது சொந்த ஊரான குருப்பம்பாடியில் உள்ள  செயிண்ட் பீட்டர், செயிண்ட் பால் கத்தோலிக்க தேவாலயம் வளாகத்தில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்குப் பலரும் அஞ்சலி செலுத்திய பின்னர், பால் வர்கீஸின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தென்னிந்திய நடிகர்கள் பலர் அமலாபாலுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.