நடிகை அஞ்சலிக்கு பிடித்த அசைவ ஹோட்டல்…! 30 வகை அசைவ விருந்து! சின்னமனூர் சிறப்பு!.

நடிகை அஞ்சலிக்கு பிடித்த அசைவ ஹோட்டல்…! 30 வகை அசைவ விருந்து! சின்னமனூர் சிறப்பு!.

சின்னமனூர் மேற்குத்தொடர்ச்சி மலையின் மடியில் இருக்கும் அழகான சிறு நகரம். பெரும்பாலான நாட்கள் இங்கு வீசும் ‘ஜிலு ஜிலு’ காற்றே ஏதாவது சூடா,சுரீர்னு காரத்தோட சாப்பிடத்தூண்டும் நம்மை.

இதைப் புரிந்துகொண்டுதான் மார்க்கையன் கோட்டையில் இப்படி ஒரு உணவகத்தை நடத்துகிறார் செல்லச்சாமி. உணவகம் துவங்கி 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.மகன் ஜோதீசுவரன் பெயரை லேசாக மாற்றி ‘ஜோதீஷ்’ என்று உணவகத்துக்கு பெயராக்கி இருக்கிறார்.

hotel

மொத்த சமையலும் செல்லச்சாமி கைவண்ணம்தான்.இந்த உணவகத்தின் சிறப்பு இவர் தரும் வெரைட்டி.30 வகையான அசைவத் தொடுகறிகளும் பிரியாணியும் புரோட்டாவும் இருக்கின்றன. சோறும் உண்டு. எப்போது போனாலும் எல்லாமே சூடாக கிடைக்கும்.விலையும் மிகக்குறைவாக இருக்கிறது. 

எல்லா ஐட்டமும் நூறு ரூபாய்க்கு உள்ளேதான்.ஆனால் இவர் தருகிற வெரைட்டிக்கும்,கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட கிரேவிகளை தனித்தனி சுவையுடன் தருவதற்கும் இவர் வாங்கும் பணம் ஒன்றுமே இல்லை. உதாரணத்திற்கு நண்டை எடுத்துக்கொண்டால், அதில் மூன்று வெரைட்டிகள் கிடைக்கின்றன.வயல்நண்டை மழைக்கும்,மலைக் குளிருக்கும் ஏற்றபடி சுரீர் மிளகுக் காரத்துடன் தருகிறார்கள். 

crab

அடுத்தது ஆற்று நண்டு கிரேவி, கடைசியாக கடல் நண்டு தொக்கு.செல்லச்சாமி எதையும் பொரித்து தருவதில்லை. முயல்கறி ட்ரையாக கிடைக்கிறது,ஆனால் அதுவும் பொரித்ததல்ல.அவ்வளவு ஏன்,கொஞ்சம் முரட்டு சைசில் லாலிபாப் தருகிறார், ஆனால் அதுவும் கிரேவியோடுதான் வருகிறது. மற்றபடி சிக்கன் தொக்கு,மட்டன் தொக்கு,தலைக்கறி, குடல்கறி,சிக்கன் சிந்தாமணி எல்லாம் இருந்தாலும் செல்லச்சாமியின் கைமணத்துக்கு சாட்சியாக நிற்பது இங்கே கிடைக்கும் நாட்டுகோழி குழம்புதான்.

hotel

இந்தக் கடையில் அதிகபட்சம் 10 பேர் மட்டும்தான் உட்கார முடியும்.ஆனாலும் தங்களுக்கான சுற்று வருவரை காத்திருந்து சாப்பிட்டுவிட்டுப் போகிறார்கள். பிரபல அரசியல்வாதிகள்,சினிமா ஆட்கள் அந்தப்பகுதிக்குப் போனால் மதிய சாப்பாடு இங்கிருந்துதான் போகும்.

gravy

நடிகைகளில் அஞ்சலிக்கு இந்தக் கடை உணவுகள் மீது ஏக காதல் விரும்பும்போது நேரடியாக கடைக்கே போய் இஷ்டத்துக்கும் ஒரு பிடி பிடித்துவிட்டுதான் வருவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..! அந்தளவுக்கு டேஸ்ட் தெறிக்கும்.

hotel

சாதாரண அரிசிசோறு,பிரியாணி, புரோட்டா என எல்லாவற்றோடும் பக்காவாகப் பொருந்திப் போகிறது இந்த நாட்டுக்கோழி குழம்பு. தேனியோ சின்னமனூரோ போனால் மார்க்கையன் கோட்டை செல்லச்சாமி கடைக்கு ஒரு விசிட் அடியுங்கள்.கிடைக்கும் சமையங்களில் மட்டும் இங்கே கிருணிக்கோழி குழம்புகூடச் செய்கிறார்களாம்,குட்லக்!.