நடிகையும் பெண் எம்பியுமான நவ்நீத் கவுர் மலைவாழ் மக்களுடன் நடனம்: வைரல் வீடியோ!

 

நடிகையும் பெண் எம்பியுமான நவ்நீத் கவுர் மலைவாழ் மக்களுடன் நடனம்: வைரல் வீடியோ!

இதையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு சுயேச்சை எம்.எல்.ஏ ரவி ராணாவை நவ்நீத் திருமணம் செய்துகொண்டார்.

நடிகையும்  எம்.பியுமான நவ்நீத் கவுர் மலைவாழ் மக்களுடன் இணைந்து நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. 

 


 

நடிகை நவ்நீத் கவுர் தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த இவர் தொடர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு சுயேச்சை எம்.எல்.ஏ ரவி ராணாவை நவ்நீத் திருமணம் செய்துகொண்டார்.

 

இவர்களின் திருமணத்திற்குப் பிறகு ரவி ராணா  யுவா ஸ்வாபிமான் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியானது நடந்து முடிந்த  மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. இந்த கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில்  நவ்நீத் கவுர்  அமராவதி தொகுதியில் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிவசேனா கட்சியின் வேட்பாளர்  ஆனந்த்ராவ்வை காட்டிலும் 36,951 வாக்குகள் பெற்று வெற்றிபெற்று  எம்பியாக தேர்வாகியுள்ளார். 

இந்நிலையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு  நவ்நீத் கவுர் அமராவதி மாவட்டத்திலுள்ள மேல்காட் பகுதி சென்றார். பின்னர்  அங்குள்ள மலைவாழ் மக்களுடன் இணைந்து அவர்களுடன் நடனம் ஆடி மகிழ்ந்தார். இதற்கான வீடியோ தற்போது இணையத்தில்  வேகமாக பரவி வருகிறது.