நடிகைகள் காணாமல் போனால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா? காவல்துறையை சாடிய உயர்நீதிமன்றம்!?

 

நடிகைகள் காணாமல் போனால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா? காவல்துறையை சாடிய உயர்நீதிமன்றம்!?

பெண் காணாமல் போன வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திய காவல்துறையை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாகச் சாடியுள்ளனர். 

சென்னை : பெண் காணாமல் போன வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திய காவல்துறையை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாகச் சாடியுள்ளனர். 

சேலத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண், 19 வயதான தனது மகள் கவுசல்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணவில்லை என்று  திருச்செங்கோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது  உரிய நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.  மேலும் மகள் எங்கு சென்றாள்? என்னவானாள்  என்பது தெரியவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

hc

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மனு குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை, காவல்துறைக்குத் தகவல் கொடுத்து விட்டோம்.ஆனாலும் தாமதமாகிறது என்று கூறியுள்ளனர். 

அப்போது காவல்துறையினருக்கு இது குறித்து கேள்வி எழுப்பிய  நீதிபதிகள், நான்கு மாதமாக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் வீட்டு  பிள்ளை காணாமல் போனால் இப்படி தான் இருப்பீர்களா? உங்கள் செயல் வருத்தமாக இருக்கிறது. நடிகைகள் காணாமல் போனதாகப் புகார் வந்தால் மட்டுமே காவல்துறை செயல்படுமா?  சாமானிய மக்களுக்கு உதவ மாட்டீர்களா? சம்பளம் வாங்கும் அதிகாரிகள் உண்மையுடன் செயல்பட வேண்டும். இல்லையென்றால் அதற்கான பலன்கள்  கிடைக்கும்’ என்று ஆவேசமாகக் கூறியுள்ளனர்.

pc

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு குறித்த நிலவரத்தை வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில்  தாக்கல் 
செய்ய வேண்டும் என்று கூறி வழக்கைத் தள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.