நடிகர் விஜய் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்ட சென்ற அதிகாரிகள்?

 

நடிகர் விஜய் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்ட சென்ற அதிகாரிகள்?

நெய்வேலியில் நடைபெற்றது. மாஸ்டர் படம் வரும் 9 ஆம் தேதி வெளியாகும் என்று செய்தி வெளியான நிலையில் கொரோனா பாதிப்பால் படவேலைகள் தடைபட்டுள்ளன. 

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர்  படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

 

மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா, சென்னை, நெய்வேலியில் நடைபெற்றது. மாஸ்டர் படம் வரும் 9 ஆம் தேதி வெளியாகும் என்று செய்தி வெளியான நிலையில் கொரோனா பாதிப்பால் படவேலைகள் தடைபட்டுள்ளன. 

tt

இந்நிலையில் கொரோனா குறித்த ஆய்வு செய்வதற்காக சுகாதாரத் துறை அதிகாரிகள் விஜய்யின் வீட்டிற்கு சென்றதாக டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் செய்தி வெளியானது. கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் வெளிநாடுகளுக்கு சென்றவர்களை  கண்டறிந்து தனிமைப்படுத்த முனைந்து வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் நடிகர் விஜய் வெளிநாட்டிற்கு சென்றதை கண்டுபிடித்ததாக தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. அதனால் சென்னையில்  நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டிற்குச் சென்று, வீட்டில் யாராவது வைரஸ் தொற்று உள்ளதா என்று விசாரித்துள்ளனர். ஆனால் கடந்த 6 மாதங்களாக அவரது வீட்டில் யாரும் வெளிநாடு செல்லவில்லை என்பதும், அவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என்பதை உறுதி செய்த பின்னர் கொரோனா நோட்டீஸ் ஒட்டாமல் அவர்கள் திரும்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.