நடிகர் விஜய், கல்பாத்தி எஸ்.அகோரம், அன்புச்செழியன் ஆகியோருக்கு வருமானவரித்துறை சம்மன்!

 

நடிகர் விஜய், கல்பாத்தி எஸ்.அகோரம், அன்புச்செழியன் ஆகியோருக்கு வருமானவரித்துறை சம்மன்!

கடந்த 5 ஆம் தேதி பிகில் படம் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனம் வீடு, சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட 20 இடங்களில் வரி ஏய்ப்பு தொடர்பான புகார் வந்ததால் வருமான வரித்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த 5 ஆம் தேதி பிகில் படம் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனம் வீடு, சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட 20 இடங்களில் வரி ஏய்ப்பு தொடர்பான புகார் வந்ததால் வருமான வரித்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அதே போல அன்று காலை முதல்  பைனான்சியர் அன்புச்செழியனின் வீட்டிலும் ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பிலும் சோதனை நடத்தப்பட்டது. 

ttn

மேலும், விஜய் மற்றும் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் பங்கு தாரரான கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் அன்பு செழியன் வீட்டில்  77 கோடி ரூபாய் ரொக்கமும் பல முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளன. அதுமட்டுமில்லாமல், அவர் 165 கோடி ரூபாய்க்கு வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்திருந்தது அம்பலமானது. விஜய் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் சிக்கவில்லை. ஆனால், கல்பாத்தி எஸ்.அகோரம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது விஜய்க்கு பிகில் படத்துக்கு வாங்கிய சம்பளம் பற்றி முக்கிய ஆவணம் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியானது. 

ttn

இந்நிலையில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நடிகர் விஜய், அன்பு செழியன், கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோர் 3 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது.