நடிகர் விஜய் உடனடியாக அரசியலில் இறங்குவாரா? பிரபல தொலைக்காட்சியின் அதிரடி கருத்து கணிப்பு!

 

நடிகர் விஜய் உடனடியாக அரசியலில் இறங்குவாரா? பிரபல தொலைக்காட்சியின் அதிரடி கருத்து கணிப்பு!

நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து  தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்து கணிப்பின் முடிவு வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து  தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்து கணிப்பின் முடிவு வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் சர்கார் படத்தின்  இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் 2-ம் தேதி சென்னையில்  பிரம்மாண்டமாக நடந்தது. இதில் பேசிய நடிகர் விஜய், ‘சில குட்டி கதைகள் கூறி அரசியல் தலைவர்களை அவர் விமர்சித்திருந்தார். உசுப்பேத்றவன் கிட்ட  உம்முனும், கடுப்பேத்றவன்கிட்ட கம்முனும் இருந்தா நம்ம லைப் ஜம்முனு இருக்கும்’என்று பேசி அரங்கத்தை அதிர வைத்தார். 

விஜய்யின் இந்த பேச்சு அவர் அரசியலில் களமிறங்க தான் என்று சிலர் கூறி வந்தனர். ஆனால் பட புரொமோஷனுக்காக தான் விஜய் இப்படி பேசுகிறார் என்று சிலர் வசைபாடினர். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்துள்ள இந்த கருத்து கணிப்பில், ஒட்டுமொத்தமாக 8520 பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதில் விஜய் உடனடியாக அரசியலில் இறங்குவாரா? என்ற கேள்விக்கு களமிறங்குவார் என்று 31% பேரும், களமிறங்க மாட்டார் என்று 36%பேரும், பின்னர் வரலாம் என்று 33%பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால்? ரஜினி கமலின் வாக்கு வங்கி பாதிக்கும் என்று 20% பேரும், திருப்புமுனை ஏற்படும் என்று 29% பேரும், அரசியலில் இன்னொரு நடிகர் என்று 51% பேரும் கூறியுள்ளனர்.
சர்கார் பட விழாவில் விஜய் பேசியது குறித்து 45%பேர் மனதில் உள்ளதைப் பேசினார் என்றும், 46% பேர் பட விளம்பரத்திற்காகப் பேசினார் என்றும், இது குறித்து கருத்து  தெரிவிக்க விரும்பவில்லை என்று 9%பேரும்  குறிப்பிட்டுள்ளனர்.