நடிகர் விஜய் அரசியல் பிரவேசம்: பயப்படுகிறதா அதிமுக?

 

நடிகர் விஜய் அரசியல் பிரவேசம்: பயப்படுகிறதா அதிமுக?

விஜய்-யை பார்த்துப் பயப்படும் அளவில் அதிமுக இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை: விஜய்-யை பார்த்துப் பயப்படும் அளவில் அதிமுக இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தயாராகியுள்ளது சர்கார் திரைப்படம். நடிகர் விஜய் நடித்துள்ள  இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகர் விஜய், ‘சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. முதலமைச்சரானால் நான் நடிக்க மாட்டேன். எல்லாம் அரசியலில் நின்று ஜெயித்து சர்கார் அமைப்பாங்க. ஆனால் நாங்க சர்கார் அமைத்துவிட்டுத் தேர்தலில் நிற்க போகிறோம்  என்று கூறினார்.

mafapandiyarajan

இந்நிலையில் சென்னை அடையாரில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம், விஜயின் அரசியல் பேச்சு குறித்து கேட்கப்பட்டபோது, ‘புதிய வரவுகளுக்கெல்லாம் அச்சப்படும் நிலையில் அதிமுக இல்லை. அரசியலுக்கு வருவதற்கு விஜய்க்கு உரிமை உள்ளது. ஆனால் அவரைப் பார்த்து அதிமுகவிற்கு பயம் கிடையாது’ என்று அதிரடியாகக் குறிப்பிட்டார்.