‘நடிகர் விஜய் அப்பாவை போக்ஸோ சட்டத்தில் கைது செயுங்கள்’ : ‘கேப்மாரி’க்கு வலுக்கும் கண்டனம்!

 

‘நடிகர் விஜய் அப்பாவை  போக்ஸோ சட்டத்தில் கைது செயுங்கள்’ : ‘கேப்மாரி’க்கு வலுக்கும் கண்டனம்!

இன்னொரு இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தை எடுத்துள்ளார் எஸ்.ஏ.சி என்றும் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

ஜெய், வைபவி சாண்டில்யா, அதுல்யா ரவி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கேப்மாரி. எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் கள்ள உறவு குறித்து கூறப்பட்டுள்ளது.

ttn

இது இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கெரியரிலேயே இது தான் மிக, மிக மோசமான திரைப்படம் என்றும்  அடல்ட் ரொமான்டிக் காமெடி என்கிற பெயரில் இன்னொரு இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தை எடுத்துள்ளார் எஸ்.ஏ.சி என்றும் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

ttn

இந்நிலையில் இப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திரையரங்க உரிமையாளர் சங்கத்தின்  ஸ்ரீதர் அளித்துள்ள பேட்டியில்,  ‘கேப்மாரி திரைப்படம் மிகவும் மோசமான கதை அம்சத்தைக் கொண்டுள்ளது.  பாலியல் குற்றங்கள்  அதிகரித்து வரும் நிலையில் கேப்மாரி போன்ற திரைப்படங்களை எவ்வாறு தணிக்கை செய்தார்கள் என்பது தெரியவில்லை.

ttn

என்னை கேட்டால் எஸ்.ஏ.சந்திரசேகரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தாலும் தவறில்லை என்று சொல்வேன்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.