நடிகர் விஜய்யுடன் இணையும் பிக் பாஸ் பிரபலம் ?

 

நடிகர் விஜய்யுடன் இணையும் பிக் பாஸ் பிரபலம் ?

நடிகர் விஜய் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு தனது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார் என்று நடிகர் வையாபுரி தெரிவித்துள்ளார்.

சென்னை: நடிகர் விஜய் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு தனது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார் என்று நடிகர் வையாபுரி தெரிவித்துள்ளார்.

vaiyapuri

தமிழில் பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் நடிகர் வையாபுரி. சமீப காலமாக படவாய்ப்புகள் இல்லாததால் நடிகர் வையாபுரி பிக் பாஸ் சீசன் 1ல் பங்கேற்றார். இந்நிலையில் இணையதள ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ‘நானும் விஜய்யும் நடித்து நீண்ட நாட்களாகிவிட்டன. இது குறித்து வெளியில் செல்லும்போதெல்லாம் அவரது ரசிகர்கள் என்னிடம் கேட்பார்கள். நான் சமீபத்தில் சர்கார் படப்பிடிப்புக்கு சென்று விஜய்-யை சந்தித்தேன். அப்போது விஜய், தான் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பத்துடன் பார்த்ததாகத் தெரிவித்தார்.

பிக் பாஸில் நீங்கள் அருமையாக விளையாடினீர்கள். என்னுடைய அடுத்த படங்களில் உங்களுக்கு வாய்ப்பு வழங்குகிறேன் என்று விஜய் கூறியதாக நடிகர் வையாபுரி கூறியுள்ளார். நடிகர் விஜயுடன் பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும், போக்கிரி, வில்லு, சுறா போன்ற படங்களில் வையாபுரி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
.