நடிகர் விஜய்க்கு அரசு தரும் நெருக்கடி…வெளி மாநிலங்களில் தஞ்சம் புகுந்த சோகம்!?

 

நடிகர் விஜய்க்கு அரசு தரும் நெருக்கடி…வெளி மாநிலங்களில் தஞ்சம் புகுந்த சோகம்!?

 படப்பிடிப்பில் எடுக்கப்படும் போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை   இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில்  விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா, நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்டோர் நடிக்கின்றனர் . இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. அவ்வப்போது  படப்பிடிப்பில் எடுக்கப்படும் போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

ttn

சமீபத்தில்   டெல்லியில் படப்பிடிப்பு முடித்து கொண்டு சென்னை திரும்பிய தளபதி 64  படக்குழுவினர் அடுத்தகட்டமாகக் கர்நாடகா மாநிலம் ஷிவமோகா சென்றுள்ளனர். இதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாகவே விஜய் படங்களில் சண்டை காட்சிகள் உள்பட பல காட்சிகளின்  படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  சாலை, கல்லூரி, பள்ளி கூடங்கள் என பொது இடங்களில் தான் நடைபெறும். அதற்கு எளிதாக அரசும், அரசு சார்ந்த துறைகளும் அனுமதி அளித்து விடும்.அது விஜய் படங்களுக்கு மட்டுமல்ல. மற்ற எல்லா படங்களுக்கும் பொருந்தும். 

இருப்பினும் விஜய் பிகில்  ஆடியோ விழாவில் பங்கேற்று  அரசியல் பேசியதற்கு பிறகு நிலைமையே வேறு. சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற சென்றால், அனுமதி தானே பண்ணிடலாம் என்று கூறிவிட்டு ஆமா ஹீரோ யாருன்னு? கேட்கிறார்களாம். அது விஜய் என்றால் ஒரு நிமிடம் என்று கூறி விட்டு யாருக்கோ…போன் செய்து விஷயத்தை கூற அனுமதி மறுக்கப்படுகிறதாம். இப்படி அரசியல் நெருக்கடிகளால்  தான் விஜய் டெல்லி, கர்நாடகா என பறந்து கொண்டிருக்கிறார் என முணுமுணுக்கிறது கோலிவுட் வட்டாரம்.