நடிகர் விஜயின் மாஸ் அரசியல் எண்ட்ரி… பக்கா ஸ்கெட்ச் போட்டு அதிரடி..!

 

நடிகர் விஜயின் மாஸ் அரசியல் எண்ட்ரி… பக்கா ஸ்கெட்ச் போட்டு அதிரடி..!

தனியறையில் 1 மணி நேரம் ரகசிய ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். ரஜினிக்கு போட்டியாக விஜயை பயன்படுத்த ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார்.

அரசியல் எண்ட்ரி விஷயத்தில் ரஜினி இன்னமும் மதில் மேல் பூனையாகத்தான்  ஆக்‌ஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் விஜயின் அரசியல் எண்ட்ரி பற்றி பலரும் இப்போது  பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
 ஆக்‌ஷன்  கதாபாத்திரங்களில்  பட்டயக் கிளப்பி,  மாஸ் ஹீரோவா உருவெடுத்தார். இந்த காலக் கட்டத்தில்தான் விஜயின் தந்தை இயக்குநர் சந்திரசேகரின் வழிகாட்டுதலில்  அரசியல் பிரவேசத்திற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது.

பல படங்களில்  எம்ஜிஆர் பார்முலாவை பின்பற்றி அநீதியை எதிர்க்கும் நல்லவராக விஜய் முன்னிறுத்தப்பட்டார். ரஜினி பாணியில் பஞ்ச் டயலாக்குகளையும்  தெறிக்கவிட்டார். இதனால், மற்ற நடிகர்களுக்கு இல்லாத அளவிற்கு விஜய்க்கு ரசிகர்களின் எண்ணிக்கை பெருகியது. ரசிகர் மன்றங்களை அமைப்பு ரீதியாக பலப்படுத்தும் பணிகளும் நடைபெற்றன.vijay

சினிமாவில் வெறும் வசனம் பேசுவதோடு மட்டும் நின்றுவிடாமல் களத்திலும் பல நேரங்களில் கால் பதித்தார் விஜய். இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு  நேரில் ஆதரவு தெரிவித்ததுடன், போராட்டத்தை நியாயப்படுத்தும் வகையில் வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டார்.

நீட் அரக்கனுக்கு பலியான மாணவி அனிதா குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.  அதுபோலவே தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்தார். ஒரு படத்தோட  உரிமை தொடர்பாக சன் டிவியுடன் பிரச்சனை ஏற்பட்டது. உடனே தந்தை சந்திரசேகருடன் அப்போதைய முதல்வர்  ஜெயலலிதாவை சந்தித்து அவருக்கு ஆதரவளிப்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார் விஜய்.

பின்னர் ’தலைவா’ படத்தில் இடம்பெற்ற சில வசனங்களுக்காக ஜெயலலிதாவின் கோபப் பார்வைக்கு  விஜய் ஆளானதும், அந்த படம் பல சிக்கல்களை சந்தித்ததும் தனிக்கதை. மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வரி  உள்ளிட்டவற்றிற்கு எதிராக வசனங்களை தெறிக்கவிட்டார் விஜய். இதன் காரணமாக மத்தியில் ஆளும் பாஜகவினரின்  அதிருப்தியை சம்பாதித்தார்.  ஆனாலும் பாஜகவினரின் அந்த எதிர்ப்பே இலவச விளம்பரமாக மாறி, மெர்சல் படத்திற்கு மகத்தான வெற்றியைத் தேடித் தந்தது.vijay

ஆரம்பத்தில் மோதிய சன் டிவியுடன் பின்னர் சமரசமாகி அந்த நிறுவனத்தின் தயாரிப்பான சர்கார் திரைப்படத்தில் விஜய் நடித்தார். அந்தப் படத்தில் திமுக தலைவர்களை கேலி செய்யும் கதாபாத்திரங்களும், வசனங்களும் இடம்பெற்றிருந்ததை சாதாரண ரசிகர்கள் கூட புரிந்துகொண்டார்கள். ஆனால் என்ன காரணமோ… திமுக தலைமை இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஓரளவிற்கு காங்கிரஸ் ஆதரவு மனநிலை கொண்ட விஜய், முன்பு ஒரு கட்டத்தில் அந்த கட்சியில் சேரவும் விரும்பினார். டெல்லி சென்று ராகுல் உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்தார்.  எனினும் பல்வேறு காரணங்களால் அது கைகூடாமல் போயிற்று.

ஜெயலலிதா, கலைஞர் இல்லாத  தமிழக அரசியல் களத்தில் மகன் விஜய்யை உடனடியாகக்  களமிறக்க வேண்டும் என்பதுதான்  தந்தை சந்திரசேகரின் திட்டம். இதை ஒட்டியே விஜய் தரப்பில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்.

விஜய் நடிப்பில் உருவான ’பிகில்’ படத்தின் இறுதிநாள்  படப்பிடிப்பில்  அந்த படத்தில் பணிபுரிந்த சுமார் 400 பேருக்கு விஜய் தங்க மோதிரம் வழங்கி அசத்தினார். இது தொடர்பான காட்சிகள், பிகில் படம் ரிலீசாகும்போது வள்ளல், ஏழைப் பங்காளன் என்கிற அடைமொழிகளுடன் சமூகவலைத்தளங்களில் மிகப் பெரிய அளவில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் விஜய் முதல்முதலாக பாடியிருக்கும் ‘வெறித்தனம்’ என்று தொடங்கும் பாடல் வரிகள், அவரது அரசியல் எண்ட்ரிக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் என பலரும் சொல்கிறார்கள். பிகில் படத்திற்கு பிறகு , எம்ஜிஆர், ரஜினி வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னைக் கொண்டாட உலகமே காத்திருக்குதுண்ணு  விஜயோட அம்மா ஷோபா அவரை உச்சிமோர்ந்து பாராட்டினார்.

பரபரப்பா எதையாவது கொளுத்திப்போடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் தன் பங்கிற்கு, ரஜினிக்கு அடுத்து இனி விஜய்தான் சூப்பர் ஸ்டார்.   ரஜினிக்கும், விஜய்க்கும்தான் போட்டி என கொம்புசீவி  இருக்கிறார்.

இப்படி ஆளாளுக்கு ஒன்றை சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில்தான் யாரும் எதிர்பாராத அந்த காட்சி அரங்கேறியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு  நடைபெற்ற கலைஞரின் கொள்ளுப் பேத்தி திருமணத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், விஜயும் நேரில் சந்தித்தார்கள். ஒருவரை ஒருவர்  கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்கும் படங்களும் வெளியாகின.Rajini

ஆனால்  இருவரும் வெறுமனே கைகுலுக்க மட்டும் செய்யவில்லை. தனியறையில் 1 மணி நேரம் ரகசிய ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். ரஜினிக்கு போட்டியாக விஜயை பயன்படுத்த ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக ஊடகங்கள் பற்ற வைத்தன. ஆனால், இதற்கு வாய்ப்பு குறைவு என்கிறார்கள்.

திமுகவில் தனக்கு அடுத்தபடியாக மகன் உதயநிதியை புரமோட் செய்யும் மனநிலையில் இருக்கும் ஸ்டாலினுக்கு, விஜயை தங்கள் பக்கம் இழுப்பதால் எதிர்காலத்தில் ஏற்படும் சங்கடங்கள் நல்லாவே தெரியும். அதேபோல்  மத்தியில் ஆளும் பாஜகவின் கோபப் பார்வைக்கு ஆளாகியிருக்கும் திமுக ஆதரவுநிலை எடுப்பதால் ஏற்படும் பிரச்சனைகளும் விஜய்க்கு புரியும்.

ஆக,  தனது அரசியல் பிரவேசம் பற்றி இன்னமும் ஒரு இறுதி முடிவு எடுக்க முடியாத நிலையில்தான் விஜய் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். ‘’ சில நேரங்களில் நாம முடிவெடுக்கணும்ணா.  சில நேரங்களில் சூழ்நிலை நம்மை முடிவெடுக்க வைக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலைக்காகக் காத்திருக்கிறேன்ணா’’.
என்பது தான் அரசியல் எண்ட்ரி தொடர்பா  விஜய் தனக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்துவரும் லேட்டஸ்ட் தகவல்.