நடிகர் விஜயின் அப்பாவுக்கு பாஜவினர் அனுப்பிய பார்சல்! என்ன இருந்தது தெரியுமா?

 

நடிகர் விஜயின் அப்பாவுக்கு பாஜவினர் அனுப்பிய பார்சல்! என்ன இருந்தது தெரியுமா?

நடிகர் விஜய்யின் அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகருக்கு பாஜகவினர் காவி வேட்டி ஒன்றை பார்சல் அனுப்பியுள்ளனர். 

நடிகர் விஜய்யின் அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகருக்கு பாஜகவினர் காவி வேட்டி ஒன்றை பார்சல் அனுப்பியுள்ளனர். 

செய்தியாளர்கள் சந்திப்பின்போது எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகன் விஜய்யின் அரசியல் வருகை உறுதி என கூறியிருந்தார். ஆனால் விஜய் இதற்கு மௌனமே சாதித்தார். மேலும் சந்திரசேகர் ஒரு குறும்பட வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசுகையில், “90% பேர் அரசியலில் திருடர்களாக உள்ளனர். அரசியல்வாதிகள் சினிமாவை அழிக்க திட்டம் போட்டுள்ளனர். ஆட்சிக்கு யார் வந்தாலும் சினிமாவை காப்பாற்றப்போவதில்லை என்று தெரிவித்தார். மேலும், தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்களுடன் அரசியல்வாதிகளும் கூட்டு சேர்ந்து செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. தமிழகத்தில் உள்ள அனைவரும் காவி வேட்டி கட்டி அலையப்போகின்றனர் என  பேசியிருந்தார். 

ss
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜகவினர் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த உற்சாகத்தில் எஸ், ஏ. சந்திரசேகருக்கு திருப்பூர் தெற்கு பாஜகஇளைஞர் அணியை சேர்ந்தவர்கள் ஒரு பார்சலை அனுப்பி உள்ளனர். அதில் காவி வேட்டி, இருந்ததாகவும் கூறப்படுகிறது.