நடிகர் விசு மறைவு – டிடிவி தினகரன் இரங்கல்!

 

நடிகர் விசு மறைவு – டிடிவி தினகரன் இரங்கல்!

மணல் கயிறு, பட்டுக்கோட்டை பெரியப்பா போன்ற குடும்ப வாழ்க்கையை மையமாக கொண்டு பல படங்களை இயக்கி நடித்தார்.

நடிகர் விசு உடல்நல குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 74. தமிழ் சினிமாவில் நாடகத்துறையில் இருந்து வந்த முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் நடிகரும் இயக்குநருமானவர்  விசு.

ttb

கே. பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து பின் மணல் கயிறு, பட்டுக்கோட்டை பெரியப்பா போன்ற குடும்ப வாழ்க்கையை மையமாக கொண்டு பல படங்களை இயக்கி நடித்தார்.

ttn

இந்நிலையில் விசுவின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘தமிழ் திரை உலகின் புகழ்பெற்ற இயக்குனர் விசு அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன் நாடகம் வெள்ளித்திரை சின்னத்திரை என கலை உலகில் தனி முத்திரை பதித்த அன்னாரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.