நடிகர் விசு உடல்நலக்குறைவால் காலமானார்!

 

நடிகர் விசு உடல்நலக்குறைவால் காலமானார்!

நடிகர் விசு உடல்நலக்குறைவால் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான விசு உடல்நலக்  குறைவால் காலமானார். 

இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என பன்முகம் கொண்ட விசு, 1941-ம் ஆண்டு பிறந்தார். இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார்.

actor visu

நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதையடுத்து பல மொழிகளில் எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் 1986-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம் பேர் விருதை பெற்றுள்ளது. தமிழின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்பட வகையைச் சேர்ந்ததாகும்