நடிகர் விசுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த ரஜினிகாந்த்!

 நடிகர் விசுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த ரஜினிகாந்த்!

நடிகர் விசு இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவின் பன்முகம் கொண்ட கலைஞராக இருந்தவர். இவர் இயக்குனர் கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். குடும்பக் கதைகள் எடுப்பதில் வல்லவரான இவர் எடுத்த ‘சம்சாரம் அது மின்சாரம்’ படம் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் மக்களைச் சென்றடைந்தது. மேலும் இந்தியாவின் பல மொழிகளிலும் திரும்ப எடுக்கப்பட்டது. 

visu

1941-ம் ஆண்டு பிறந்த இவர் பல்வேறு  சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல் என பணியாற்றி வந்தார். சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த இவர் இயற்கை எய்தினார். நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது அவருக்கு இரங்கல் நிகழ்ச்சிகளில் பெரும்பாலானோர் கலந்து கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரின் இரங்களுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

rajini

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விசு மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் “என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர், ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு அவர்களின் மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.