நடிகர் லாலுடன் தனுஷ்… கர்ணன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!

 

நடிகர் லாலுடன் தனுஷ்… கர்ணன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது   திருநெல்வேலி மாவட்டத்தில் வேகமாக நடந்து வருகிறது.

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.   மாரி செல்வராஜின் அடுத்த படைப்பில் நடிகர் தனுஷ் நடிக்க, கலைப்புலி எஸ்.தாணு படத்தைத் தயாரிக்கிறார்.  மேலும் இப்படத்திற்குக் கர்ணன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ttn

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, மலையாள நடிகர் லால் உள்பட பலரும் இதில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது   திருநெல்வேலி மாவட்டத்தில் வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் கர்ணன் படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  இதில் தனுஷுடன் நடிகர் லால் இருப்பது குறிப்பிடத்தக்கது.